வயிற்றுப்போக்கு குணமாக | Loose Motion Treatment at Home in Tamil
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும், ஒட்டுண்ணிகளாலும், மாத்திரைகள், நாம் சாப்பிடும் சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் போவது போன்ற காரணங்களால் நம்மில் பலருக்கும் வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கும். வயிற்றுப்போக்கால் உடலில் இருக்கும் நீர்சத்து குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இது ஓரிரு நாளில் சரியாகி விட்டால் நல்லது, அப்படி இல்லையென்றால் உடல் இயக்கங்கள் மிகவும் பாதிக்கப்படும். நாம் இந்த தொகுப்பில் வயிற்றுப்போக்கு நிற்க எளிய மருத்துவங்களை பார்க்கலாம் வாங்க.
வயிற்றுப்போக்கு உடனே நிற்க வீட்டு வைத்தியம்:
வெந்தயம் – Diarrhea Home Remedies in Tamil:
- ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- அதன் பிறகு 1 கப் தயிரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 1 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள், 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று போக்கு ஒரே நாளில் சரியாகிவிடும்.
முருங்கை சாறு:
- வயிற்று போக்கு நிற்க: வயிற்று போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அதில் உள்ள சாரை மட்டும் பிரித்தெடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வயிற்று போக்கு சரியாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தினமும் இதை செய்ய வேண்டும்.
பிளாக் டீ:
- வயிற்றுப்போக்கு உடனே நிற்க வீட்டு வைத்தியம்: ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 1 டேபிள் ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு அதனை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று போக்கு குணமாகிவிடும்.
மோர்:
- How to Stop Loose Motion in Tamil: வயிற்று போக்கு இருக்கும் போது உடலில் இருக்கும் நீர்சத்து குறைந்திருக்கும், அதனால் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்வது நல்லது.
- தினசரி 1 நாளில் மூன்று முறை 1 டம்ளர் மோர் குடிப்பது மிகவும் நல்லது. மோரில் இருக்கும் Probiotics குடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலை பாதுகாப்பதுடன் செரிமானத்திற்கும் உதவுகிறது.
சீரக தண்ணீர்:
- 1 டம்ளர் தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு பின் அதை வடிகட்டி, ஆற வைத்து பருகவும். இந்த முறையை நீங்கள் ஆகாரத்திற்கு பிறகு 3 வேலை எடுத்து கொள்வது நல்லது.
- சீரகம் செரிமானத்திற்கும், குடல் எரிச்சலை சரி செய்யவும் உதவும்.
புதினா சாறு:
- சூடான கொதி நீரில் 1 டேபிள் ஸ்பூன் புதினா சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று போக்கிற்கு தீர்வு கிடைக்கும். குடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
வயிற்றுப்போக்கு உணவுகள்:
- வயிற்று போக்கு இருக்கும் போது எளிதில் செரிமானம் அடைய கூடிய, சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
- உணவில் அடிக்கடி தயிர் சேர்த்து கொள்வது சிறந்தது.
- அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கஞ்சி, ரசம் சாதம் போன்ற உணவுகளை வயிற்று போக்கு உள்ள காலத்தில் எடுத்து கொள்வது நல்லது.
வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் |
வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |