நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..! Immunity boosting foods..!
சில பேருக்கு அடிக்கடி உடல்நிலையில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இவர் பார்த்து சரியான நோஞ்சா உடம்பா, பொழுதினைக்கும் ஏதவாது பண்ணிகிட்டே இருக்கு என்று கிண்டலும், கேலியும் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் உங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். இதற்காக நெனெகல் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை, மறந்து எடுத்து கொள்ள வேண்டியதில்லை. சரியான உணவு முறையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
நோய் எதிர்ப்பு சக்தி குறைவுக்கான காரணங்கள்:
ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தத்தை கொடுக்கும் வேலைகள், பலவீனமான உடல் அமைப்பு, மது, தூக்கமின்மை, புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோயும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முக்கிய காரணமாக அமைகின்றது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு, புற்றுநோயால் ஹீமோதெரபி கொடுத்திருந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.பேரீச்சை :
நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து பேரீச்சையில் நிறைய உள்ளது. தினமும் தேனில் ஊறவைத்த பேரீச்சையை சாப்பிட்டு வருவதினால் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற முடியும். அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். வளரும் குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு பழம் பேரீச்சை.
எலுமிச்சை:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிக முக்கியமான சத்து விட்டமின் C. விட்டமின் C சத்து குறையும் போதுதான், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கின்றது.
சளி முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களையும் தடுக்க கூடிய பழம் தான் எலுமிச்சை. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள்.
தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் அருந்தி வர உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் |
பூண்டு:
ஆயுர்வேத மருத்துவங்களில் தலை வலி முதல், புற்று நோய் வரை பல நோய்களை குணப்படுத்த பூண்டு ஒரு சிறந்த பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் உள்ள ஒருவகையான அலிசின் (Alesion) சத்து வைரஸ் தொற்றுகள் முதல் அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் அழித்து போராடும் தன்மை கொண்டது.
பூண்டு இரத்த ஓட்டங்களை அதிகரிக்கவும், ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிப்பதில் பூண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அன்றாட உணவு பழக்கங்களில் பூண்டினை அதிகளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கஷாயம் தயாரிக்கும் முறை |
மஞ்சள்:
மஞ்சள் இயற்கையாகவே கிருமி நாசினி பொருளாக விளங்குகிறது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பொருள்களில் மிகவும் முக்கியமானது. மஞ்சள் இரத்தத்தை சுத்திகரிக்க கூடியது, மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து நம்மை காக்க கூடியது.
பாலில் சிறிதளவு மஞ்சள் தூள், பனங்கற்கண்டு ஆகியவற்றை கலந்து தொடர்ந்து அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி மிக விரைவில் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
முட்டை:
விட்டமின் D நிறைந்த உணவு பொருட்களை தினமும் அதிக அளவு உட்கொள்வதினால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக எளிதாக அதிகரித்து விடலாம்.
அந்த வகையில் வைட்டமின் D அதிகம் நிறைந்த உணவுகளில் மிகவும் முக்கியமானது முட்டை.
எனவே விட்டமின் D சத்து அதிகம் நிறைந்துள்ள முட்டையினை தினமும் சாப்பிடுவதினால், மிக எளிதாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம்.
அதேபோல் தினமும் காலையில் சூரிய வெயிலில் சிறிது நேரம் நின்றுவருவதன் மூலமாகவும் நம் உடலில் விட்டமின் D சத்தினை அதிகரிக்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
அதிக வெண்ணெய், எண்ணெய், ஜங்க் உணவுகள் போன்றவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் அதிகமாக ஸ்வீட் அல்லது டீ மற்றும் காபியில் அதிக சர்க்கரை போட்டு குடிக்க கூடாது. அதிக சர்க்கரை உள்ள உணவுகள்
பான்பரக், மது, புகைபிடித்தல் போன்றவை செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைய ஆரம்பிக்கும்.
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |