மஞ்சள் காமாலை வர காரணம் | Manjal Kamalai Vara Karanam
நமக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை குணப்படுத்துவது எளிதாக இருக்கும். அந்த வகையில் நம்மை மறைமுகமாக தாக்கக்கூடியது என்றால் மஞ்சகாமாலை தான். அதனை முதல் நிலையிலே அறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது இல்லையெனில் மனிதனின் உயிரிக்கே ஆபத்தை தர கூடியது மஞ்சகாமாலை.
எல்லா நோய்களுக்கும் சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அந்த வகையில் மஞ்சகாமாலை நோய்க்கும் உடம்பில் உபாதைகள் ஏற்படும். என்னென்ன உபாதைகள் என்பதை பொதுநலம்.காமில் படித்து அறிந்து கொள்வோம்.
மஞ்சகாமாலை என்றால் என்ன.?:
நம் உடலில் பிலிரூபின் என்பது பித்த நீரிலும், சிறு நீரிலும் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இத்தகைய செயல்களை செய்யக்கூடிய பிலிரூபின் அளவு அதிகமாகுவதை மஞ்சகாமாலை என்று சொல்லப்படுகிறது.
மஞ்சகாமாலை உணவு முறை |
தோல் நிறம் மாறுதல்:
மஞ்சகாமாலை அறிவதற்கான முதல் அறிகுறியே இது தான். தோல் மற்றும் கண்களில் உள்ள வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இதே போல் உடல் முழுவதும் நிறம் மாறினால் மஞ்சகாமாலை அதிகமாகிவிட்டது. உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்ய வேண்டும்.
காய்ச்சல் அளவு:
மஞ்சகாமாலையா என்று அறிவதற்கு காய்ச்சலும் ஓர் அறிகுறி தான். காய்ச்சலை மட்டும் வைத்து மஞ்சகாமாலை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பொதுவாக வெயில், மழை மற்றும் குளிர் காலங்களில் காய்ச்சல் வந்து போகும். அந்த காய்ச்சலானது உடம்பின் வெப்பநிலை 100-யை விட அதிகமாக இருக்கும் அதனோடு அடிவயிற்றில் வலி, அடிவயிறு மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை ஏற்பட்டால் மஞ்சகாமாலையாகும்.
வாந்தி உணர்வு:
மஞ்சகாமாலையின் மற்றொரு அறிகுறி தான் வாந்தி. பொதுவாக வாந்தி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உணவு முறை மாற்றம் இதனால் கூட வாந்தி ஏற்படும். ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் மேல் வாந்தி தொந்தரவு ஏற்பட்டால் மஞ்சகாமாலையா என்று பரிசோதிப்பது நல்லது.
பசி எடுக்காமல் இருக்க காரணம்:
நமக்கு பசி என்பது உணர்வு அல்லவா ஆமாம் பசி எடுத்தால் தான் நன்றாக சாப்பிட முடியும். சாப்பிட்டால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். அப்படியான பசி இல்லை என்றால் நாம் மந்தமான உணர்வுடன் இருப்போம். செரிமான பிரச்சைனையோடு பசி இல்லாமலும் காணப்பட்டால் கவனிக்க வேண்டும். இனிமேலும் அலட்சியம் செய்யாதீர்கள். மஞ்சகாமைலயா என்று பரிசோதியுங்கள்.
திடீர் உடல் எடை குறைவு:
மஞ்சகாமாலை ஏற்பட்டால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்களை குறைந்து உடல் எடை குறையும். இயல்பாக இருக்கும் உடல் எடையை விட திடீரென்று உடல் குறைவதை கவனிக்க வேண்டும்.
மலம் நிறம் கருப்பு:
மஞ்சகாமாலை நோய் தீவீரமானால் கல்லீரல் வேலை செய்வதை நிறுத்தும். இதனால் மலத்தில் பிலிரூபின் வெளியேற்றம் செயல்படாது. இதன் காரணமாக மலத்தின் நிறம் மாற்றம் அடைத்திருக்கும். சிலருக்கு கருமை நிறத்தில் மலம் வெளியேறும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |