மஞ்சள் காமாலை குணமாக வீட்டு வைத்தியம் (Jaundice treatment in tamil)..!
Manjal kamalai treatment in tamil /manjal kamalai marunthu – மறைமுகமாக மனிதனின் உயிரையே கொள்ளகூடிய நோய்களில் ஒன்றுதான் மஞ்சள் காமாலை நோய். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டியது, மிகவும் அவசியம். இல்லையெனில் மனிதனின் உயிருக்கே பேர் ஆபத்தை ஏற்படுத்திவிடும் இந்த மஞ்சள் காமாலை நோய்.
இந்த மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..! Ulcer முற்றிலும் குணமாக Tamil…
மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது:
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவு பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதன் காரணமாக உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. அதேபோல் அதிகம் மது அருந்துவதினாலும், ஹெபடைட்டிஸ் என்னும் கிருமிகள் கல்லீரலை அதிகம் தாக்குவதினாலும், இந்த மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை அறிகுறிகள் (Jaundice symptoms):-
ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் அவர்களுக்கு வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.
மஞ்சள் காமாலை:-
மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அதிகமாக அருந்தும் மதுபானம், டைபாய்டு போன்ற காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், சில மாத்திரைகள் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
இதற்கான சிகிச்சை முறைகள்:-
இரத்த பரிசோதனைகள் மூலம் மஞ்சள் காமாலை தங்களுக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தங்களுக்கு மஞ்சள் காமாலை உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் நிச்சயமாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!
தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
Manjal kamalai treatment in tamil:-
அதிக காரம் நிறைந்த உணவு வகைகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.
அதேபோல் மஞ்சள் காமாலை வந்து 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை உட்கொள்ள கூடாது.
குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு, அதிக புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
Manjal kamalai treatment in tamil
மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து: 1
Manjal kamalai treatment in tamil – இந்த மஞ்சள் காமாலை குணமாக சிறந்த மூலிகை மருந்து கீழாநெல்லி.
கீழாநெல்லி ஒரு கையளவு, சீரகம் ஒரு ஸ்பூன் இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து: 2
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து: 3
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.
இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..! ஒரே வாரத்தில்
குறிப்பு:-
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
உடலில் உள்ள பித்தத்தை தணிக்க காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் ஆகியவரை அதிகம் சாப்பிட வேண்டும்.
மழைக்காலத்தில் நீரை கொதிக்கவைத்து அருந்த வேண்டும்.
புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |