கருப்பு கொண்ட கடலை VS வெள்ளை கொண்ட கடலை எது சிறந்தது.?

kabuli chana vs kala chana in tamil

Kala Chana vs Kabuli Chana

கடலை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. கடலையை மாலை நேரத்தில் சுவையாக செய்து சாப்பிடுவோம். கருப்பு கடலையை  விட வெள்ளை கடலையில் சுவை அதிகமாக இருக்கும். சுவை அதிகமாக இருப்பதாலேயே வெள்ளை கடலையை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையை விட ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று சாப்பிடுவது தான் சரியானது. அதனால் இந்த பதிவில் கருப்பு கடலை, வெள்ளை கடலை இரண்டில் எது சிறந்தது என்று படித்து தெரிந்து கொள்வோம்.

கருப்பு கொண்டை கடலை VS வெள்ளை கொண்டைக்கடலை

kabuli chana vs kala chana in tamil.jpg

புரதம்:

100 கிராம் கருப்பு கடலையில் 7 முதல் 8 கிராம் புரதம் உள்ளது. 100 இராம் வெள்ளை கடலையில் 10 முதல் 11 புரதம் உள்ளது. தசை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் தேவைப்படுகிறது.உடலில் புரத சத்தை அதிகப்படுத்த இந்த இரண்டு கடலையும் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து:

10 கிராம் வெள்ளை  கடலையில் 10 முதல் 11 கிராம் புரோட்டீனும், இரும்புச்சத்து 6.2 கிராம் உள்ளது. அதுவே கருப்பு  கடலையில் 7 முதல் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. இதை இரும்பு சத்து ஏதும் இல்லை.

கொண்டைக்கடலை பயன்கள் 

எலும்புக்கு சிறந்தது:

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கருப்பு கொண்ட கடலையை விட வெள்ளை கடலை சாப்பிடுவது தான் நல்லது. கருப்பு கடலையும் எலும்புகளை வலிமையாக்கும். அதே சமயம் வெள்ளை கடலையில் கால்சியம் நிறைந்துள்ளது. இவை எலும்பை வலிமையாக்கும்.

 உடலில் கால்சியம் சத்து குறைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும். அதனால் தினமும் 30 முதல் 35 கிராம் வெள்ளை கடலை எடுத்து கொள்வது நல்லது. 

இதயத்திற்கு ஆரோக்கியம்:

இதயத்திற்கு வெள்ளை கடலை தான் சிறந்தது. ஏனென்றால் இதில் தாதுக்கள், வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளது. இதய நோய்கள் வராமலும், உடல் உள்ள கெட்ட கொழுப்பையும் நீக்குகிறது.

மலச்சிக்கலுக்கு சிறந்தது:

கருப்பு கடலையில் 17 கிராம் நார்சத்து உள்ளது, வெள்ளை கடலையில் 18 கிராம் நார்ச்சத்து உள்ளது. மலசிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு உடலில் நார்ச்சத்து தேவைப்படுகிறது. அதற்கு சிறந்த தேர்வாக வெள்ளை கடலையை எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய்:

கருப்பு கடலையில் 13 கிளைசெமிக் குறியீடு, வெள்ளை கடலையில் 8 கிளைசெமிக் குறியீடு உள்ளது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு வெள்ளை கடலை சிறந்ததாக இருக்கும்.

புற்றுநோய்:

வெள்ளை கடலை புற்றுநோயை தடுக்க உதவுகிறது. வெள்ளை கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பெருங்குடல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

கருப்பு கடலை மற்றும் வெள்ளை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த வேறுபாட்டினை வைத்து பார்க்கும் போது வெள்ளை கொண்ட கடலை தான் சிறந்தது.

பாதாம் VS வேர்க்கடலை இரண்டில் எது சிறந்தது..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்