Kidney Healthy Foods in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே நமக்கு மருந்தாக பயன்படுகிறது. அதாவது நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்து ஏதாவது ஒரு நோய்க்கு மருந்தாக இருக்கிறது. அதுபோல நாம் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் |
சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்:
எலுமிச்சை பழம்:
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அதனால் இது சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதுபோல தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து குடித்து வருவதால் சிறுநீரகத்தில் கற்கள் படிவதை தடுக்கிறது.
கீரைகள்:
நம் அன்றாட வாழ்வில் தினமும் ஏதாவது ஒரு கீரையை நாம் தவறாமல் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். கீரைகளில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ் |
முட்டைகோஸ்:
இதில் வைட்டமின் சத்துக்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் டையட்டரி நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முட்டைகோஸை வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
பூண்டு:
இதில் மாங்கனீசு, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற பண்புகள் அதிகம் இருப்பதால் இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
கொத்தமல்லி:
சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் உணவுகளில் கொத்தமல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் மாங்கனீசு, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அதனால் இது சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.
சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் |
சிறு வயதில் கிட்னி செயலிழக்க காரணம் என்ன தெரியுமா..? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |