கொடுக்காப்புளி மருத்துவ பயன்கள்..! Kodukapuli Health Benefits In Tamil..!
kodukapuli uses: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கொடுக்காப்புளியின் அற்புத நன்மைகளை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். கொடுக்காப்புளி என்றாலே அனைவரின் மனதிலும் நினைவிற்கு வரும் ஒரே விஷயம் நம் பள்ளி பருவம் தான். கொடுக்காப்புளி நம் உடலில் பல நோய்களை தீர்க்கக்கூடிய பழ வகையாகும். கொடுக்காபுளியானது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற மூன்று வகையான சுவை தன்மையினை கொண்டது. சரி வாங்க நண்பர்களே இப்போது கொடுக்காப்புளியில் அடங்கியுள்ள சத்துக்கள், கொடுக்காப்புளி சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று விரிவாக படித்தறியலாம்..!
கொடுக்காப்புளியில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கொடுக்காப்புளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி 1, பி 2, பி 16, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்தது இந்த கொடுக்காப்புளி.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொடுக்காப்புளி:
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூட தேவையான வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. இந்த சத்துக்கள் உடலில் இருக்கக்கூடிய வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். கொடுக்காப்புளி சாப்பிடுவதன் மூலம் காற்றினால் பரவக்கூடிய வைரஸ், தொற்று நோய் பரவலை தடுக்கும்.
பித்தப்பை கற்களை அகற்றும் கொடுக்காப்புளி:
பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கொடுக்காப்புளியினை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தப்பைகளில் உள்ள கற்கள் முற்றிலும் கரைந்து விடும். அதுமட்டும் இல்லாமல் கல்லீரலை பாதிக்கக்கூடிய மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது கொடுக்காப்புளி:
கொடுக்காப்புளியில் அதிக பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடல் எலும்புகள் மற்றும் பற்களை நன்கு வலுப்படுத்தும். உடலில் ஏற்பட்ட உட்காயங்களை விரைவில் ஆற்றும். அதோடு வாத நோயால் உண்டாகக்கூடிய கீழ் வாதம், மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனையினால் மிகவும் அவதிப்படுபவர்களுக்கு மிக சிறந்த பழம் என்று கொடுக்காப்புளியினை சொல்லலாம்.
பல் வலியை போக்கும் கொடுக்காப்புளி:
கொடுக்காப்புளி பற்களில் ஏற்படும் இரத்த கசிவு, பல் வலி, பல் வீக்கம் போன்ற பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும் இந்த கொடுக்காப்புளி.
செரிமான கோளாறுகளிலிருந்து விடுவிக்கும் கொடுக்காப்புளி:
செரிமான சம்மந்தப்பட்ட அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு ரொம்ப நல்லது கொடுக்காப்புளி. கொடுக்காபுளியில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மற்றும் பல சத்துக்கள் குடலில் உட்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி தீராத குடற்புண்களை ஆற்றும்.
உடல் எடையை குறைக்க உதவும் கொடுக்காப்புளி:
கொடுக்காப்புளியில் இருக்கும் அதிக நார்ச்சத்துக்கள் உடலில் தேவையில்லாத கொழுப்புகளை அகற்றி உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க உதவும். குறிப்பாக உடலில் LDL என்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைவதோடு மட்டும் இல்லாமல், கொழுப்புகள் அளவும் சீராக இருக்கும்.
மேலும் கொடுக்காப்புளி சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நோயை சரி செய்யலாம் என்பதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நலவாழ்வும் |