கொள்ளு பருப்பு நன்மைகள் | Kollu Paruppu Benefits in Tamil
அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் பல நன்மைகள் அடங்கியுள்ள கொள்ளுவை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். கொள்ளு என்றாலே நம் அனைவரின் மனதிலும் எழுவது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கொள்ளுவில் அதிகமான மருத்துவ குணம் கொண்டுள்ளதால் யோசிக்காமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். சரி வாங்க நண்பர்களே கொள்ளு தானியத்தினை சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி இப்போது படித்தறியலாம்.
கொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி? |
உடல் எடையை குறைக்கும் கொள்ளு:
நம் உணவில் கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டு வர அதிக உடல் எடையானது கட்டுக்குள் இருக்கும். இரவு படுக்கைக்கு முன்பு ஒருகைப்பிடி அளவு கொள்ளுவை எடுத்து நீரில் ஊறவைத்து மறுநாள் காலை எழுந்ததும் ஊறவைத்த கொள்ளுவை சாப்பிட்டுவர உடல் எடையானது விரைவில் குறையும்.
சளி, காய்ச்சல் குணமாக:
- கொள்ளு நன்மைகள்: ஜலதோஷம் மற்றும் ஜுரம் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். கொள்ளுவை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அந்த நீரினை குடித்து வந்தால் ஜலதோஷம் முற்றிலும் நீங்கும்.
- மேலும் இதனை ரசம் வைத்து சாப்பிட்டுவர உடலில் ஏற்படும் அனைத்து வலி, ஆஸ்துமா போன்ற நோயினால் உண்டாகும் சுவாச பிரச்சனை அனைத்தும் சரியாகும். காய்ச்சலும் விரைவில் குணமாகும்.
கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி? |
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு:
- நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் இந்த கொள்ளுவில் நிறைந்துள்ளது. கொள்ளு சாப்பிடுவதனால் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பலத்துடன் வைத்திருக்கும்.
- எந்த வித நோய் பாதிப்பும் நம்மளை தாக்காமல் பாதுகாக்கும். கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து நன்கு காய்ச்சி கஞ்சி வைத்து குடித்துவர பசியின்மை பிரச்சனை நீங்கும். நம்முடைய உடலும் வலுவாக இருக்கும்.
நவதானியம் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்..! |
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவும் கொள்ளு:
கொள்ளு பருப்பு நன்மைகள்: சிறுநீரக பகுதியில் கற்கள் உள்ளவர்கள் கொள்ளுவை சமைத்து சாப்பிட்டுவர சிறுநீரக கற்கள் வெளியேறும். மேலும் உதாரணத்திற்கு கொள்ளுவையும், இந்துப்பையும் சிறிதளவு எடுத்து அதனுடன் 1 லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து சாப்பிட்டுவர சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரக்கூடிய அனைத்து கற்களும் கரைந்துவிடும்.
விந்தணுக்களை அதிகரிக்க உதவும் கொள்ளு:
கொள்ளுவில் அதிகமான பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க கொள்ளு பயன்படுகிறது.
சர்க்கரை நோயை தடுக்கும் கொள்ளு:
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் பெயரானது`கிளைசெமிக் இண்டெக்ஸ்’ ஆகும். அந்த அளவானது அதிகரிக்கும்போது உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவானது அதிகரிக்கும். இதனை தவிர்க்க கொள்ளுவை சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.
சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? |
மலச்சிக்கல் குணமாக:
கொள்ளுவில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. தீராத மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிதளவு முளைகட்டிய கொள்ளு தானியத்தினை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
உடலிலுள்ள கொலஸ்ட்ரால் குறைய:
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பதினாலும் பல நோய்கள் உண்டாகலாம். உடலில் தேவையில்லாமல் உண்டாகும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஊறவைத்த கொள்ளுவினை தினமும் இரு வேளையிலும் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் அதிகளவு கொழுப்பானது குறைந்து உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
கண்களில் ஏற்படும் நோய்கள் குணமாக:
மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் ஏற்பட்டால் கண்களை திறக்க முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள். இதனால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதிலிருந்து விடுபடுவதற்கு இரவு படுக்கைக்கு முன்பு சிறிய கிண்ணத்தில் கொள்ளுவை ஊறவைத்து காலை எழுந்ததும் அந்த ஊறவைத்த கொள்ளு நீரினை எடுத்து கண்களை கழுவி வர கண்களில் உள்ள எரிச்சல் நீங்கி கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |