உண்மையில் Lemon Water மட்டும் குடித்தால் உடல் எடையை குறையுமா?

Advertisement

எலுமிச்சை நீர் உடல் எடையை குறைக்குமா? Can drinking hot lemon water really help in fat loss?

இப்போதேல்லாம் பலர் உடல் எடையை குறைய பலவகையான விஷயங்களை பின்பற்றுகின்றன.. இருந்தாலும் அவற்றில் முழுமையான ரிசல்ட் கிடைப்பதில்லை.. இதனால் பலர் மனவருத்தம் அடைவதும் உண்டு. உடல் எடை குறைப்பதெல்லாம் ஒன்றும் கடினமான விஷயம் இல்லை. நாம் மனது வைத்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும். அதாவது சிலவிஷயங்களை கடைபிடிக்க வேண்டும், சில விஷயங்களை தவிர்க்க வேண்டும், தினமும் காலை 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்தாலே நம் உடல் சரியான எடைக்கு வந்துவிடும். இதனுடன் சேர்த்து காலை தினமும் எலுமிச்சை நீரும் பருகிவர வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே போதும் நமது உடல் எடை குறையும். ஆனால் பலர் வெறும் எலுமிச்சை நீர் பருகினால் மட்டும் உடல் எடையை இம்சிக்க எளிதாக குறைத்துவிடலாம் என்று கூறுகின்றன. அது உண்மைதானா என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. சரி வாங்க  Lemon Water குடித்தால் மட்டும் உடல் எடை குறைந்துவிடுமா என்று இப்பொழுது நாம் அறிவோம்.

Lemon Water தயார் செய்வது எப்படி?

லெமன் ஜூஸை சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்தால் அதுவே லெமன் வாட்டர் ஆகும். பொதுவாக லெமன் வாட்டர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை நீர் (Lemon Water) எப்பொழுது பருக்க வேண்டும்?

Lemon Water

தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு இந்த எலுமிச்சை நீரை தயார் செய்து பருக்க வேண்டும். அதுவும் ஒரு கிளாஸ் அருந்தினால் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

பயன்கள்:

இந்த பணத்தை தினமும் பருகிவந்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேற்றும்.

ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரில் சக்கரை சேக்காமல் பருகினால் அதில் சுமார் ஆறு கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆக  நமது உடலில் கலோரிகளின் அளவை சரியான நிலையில் பாதுக்காக்க உதவுகிறது.

Healthify Me-யின் தரவுகளின் படி, ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் இருக்கும் 110 கலோரிகளுடன் ஒப்பிடும் போது, அரை எலுமிச்சை ஜூஸ் கொண்ட ஒரு கிளாஸ் தண்ணீரில் 6 கலோரிகள் மட்டுமே உள்ளது.

தினமும் இந்த Lemon Water-ஐ அருந்திவருவத்தினால் உடல் மிகவும் புத்துணர்ச்சியாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும்.

உடல் பருமன் உட்பட உங்கள் உடலில் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கும் சரியான நீரேற்றம் அவசியம். ஆக உங்கள் உடல் சரியான நீரேற்றத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த Lemon Water-ஐ நீங்கள் தினமும் பருகிவரலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..!

எலுமிச்சை நீர் உடல் எடையை குறைக்குமா? | Lemon Water Help You Lose Weight?

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த எலுமிச்சை நீரை மட்டும் பருகினால் உடல் எடை குறையும் என்று 100% சொல்ல முடியாது. இந்த பானத்தை அருந்தியபிறகு 1/2 மணி நேரம் நடைப்பயிற்சி அல்லது உடற்பெயர்ச்சி, சரியான உணவு முறை டயட், சரியான நேரத்திற்கு உறங்குவது என்று இது போன்ற விஷயங்களை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும். வரும் Lemon Water மட்டும் அருந்தினால் உடல் எடை கண்டிப்பாக குறையாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement