லோங்கன் பழத்தின் நன்மைகள் | Longan Fruit Benefits in Tamil

Advertisement

லாங்கன் பழத்தின் நன்மைகள்

இந்த உலகத்தில் நமக்கு தெரிந்த தெரியாத பலவகையான பழங்கள் உள்ளன. ஒவ்வொரு பழத்திலும் நமக்கு தேவையான ஏதோ ஆற்றல், சத்துக்கள் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட லோங்கன் பழத்தின் நன்மைகள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த பழத்தை சீனாவில் Dragon Eye என்று அழைப்பர். இது லிச்சி வகையில் தொடர்பான ஒரு பழமாகும். இந்த பழம் வட்டவடிவில் ஒரு பெரிய திராட்சையின் அளவு போன்றது. பழுப்பு நிற ஓட்டையும் அதன் சதைப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனுடைய விதை கருப்பு நிறத்தில் இருக்கும். சரி வாங்க நாம் இந்த பழத்தின் நன்மை பற்றி பார்க்கலாம்.

இரத்த உற்பத்தியை அதிகரிக்க – Longan Fruit in Tamil:

Longan Fruit in Tamil

 

  • இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இந்த பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் வயதானவர்களுக்கு வரும் இரத்தசோகையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூக்கமின்மையை சரி செய்ய – Longan Fruit Benefits in Tamil:

longan fruit in tamil

  • தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இந்த பழம் மிகவும் உதவுகிறது. தூக்கமின்மை காரணமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் அதனை தவிர்த்து இந்த லாங்கன் பழத்தை பயன்படுத்துவது நல்லது.
  • இந்த பழத்தில் மட்டுமில்லாமல் இதன் இலைகளிலும் Bio Active பண்புகள் இருப்பதால் நரம்பு மண்டலத்தை பாதுகாத்து நரம்பியல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மன உளைச்சல், கவலை மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை தடுக்கலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

Longan Fruit in Tamil – புற்றுநோய் வளராமல் தடுக்க:

Longan Fruit Benefits in Tamil

  • Polyphenol எனும் Chemical இருப்பதால் புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதை தடுத்து Cancer-யிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இந்த பழத்தின் பூ, இலை, பழம், விதை என அனைத்து பாகங்களிலும் அதிக அளவு நன்மை உள்ளது. இந்த பழத்தின் விதைகளை சாப்பிடுவதன் மூலம் கல்லிரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது.

Longan Fruit Benefits in Tamil – ஒவ்வாமைகளை குணப்படுத்த:

Longan Fruit Benefits in Tamil

  • இந்த பழத்தின் ஒட்டுமொத்த பாகங்களிலும் Galic Acid, எபிடெர்சின் மற்றும் எலெக்டிக் அமிலம் இருப்பதால் உடலில் ஏற்படும் தோல் சம்மந்தமான நோய்கள், குடல் நோய், அழற்சி மற்றும் காயம் போன்றவைகள் ஏற்பட்டாலும் அதனை தடுப்பதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.

Longan Fruit in Tamil – சருமத்தை பாதுகாக்க:

longan fruit in tamil

  • phytochemical எனும் வேதிப்பொருள் இந்த பழத்தில் இருப்பதால் சரும பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும் இருப்பதற்கு உதவுகிறது. மேலும் தோல் புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.

லோங்கன் பழத்தின் நன்மைகள்:

  • இந்த பழத்தின் விதைகளை Liquid -ஆக செய்து Mouth Wash-ஆக பயன்படுத்துவதன் மூலம் பல சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கலாம். மேலும் இந்த விதைகளை பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பயன்படுத்தலாம்.
  • இந்த விதையில் Safolin எனும் வேதிப்பொருள் தலைமுடியை பாதுகாப்பதில் உதவுகிறது.

longan fruit in tamil

  • அடிக்கடி சாப்பிட நினைப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி தூண்டுவதை தவிர்க்கலாம்.
  • அதிக அளவு ஊட்டச்சத்து இருந்தாலும் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த பழம் உதவியாக இருக்கும்.
சப்போட்டா பழம் நன்மைகள்

Longan Fruit Benefits in Tamil:

  • பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படும். மேலும் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

longan fruit in tamil

  • பாம்புக் கடித்தவர்கள் இந்த பழத்தின் விதையை சாப்பிடுவது நல்லது. சீனா, தைவான் போன்ற நாடுகளில் பாம்புக்கடி விஷத்திற்கு இந்த பழத்தின் விதையை பயன்படுத்தி வருகிறார்கள்.

லாங்கன் பழத்தை சாப்பிட கூடாதவர்கள்:

  • 30கி லாங்கன் பழத்தில் 20.7கி கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.
  • இது உடம்பில் இன்சுலினை அதிகரிப்பதால் உடம்பில் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

longan fruit in tamil

  • உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது. உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடுவதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
டிராகன் பழம் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil 
Advertisement