மூலிகை பயன்கள்/ Mooligai Palangal: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் பல வகையான மூலிகை செடி வகைகளின் மருத்துவ குணங்களை பற்றித்தான் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். மூலிகை செடிகள் (medicinal plants) தான் பல சித்த மருத்துவ துறைகளில் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இயற்கையாக வளரும் மூலிகைகளில் நம் உடலிற்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒவ்வொரு மூலிகை செடிகளிலும் எண்ணற்ற அளவிற்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நமக்கு எந்த மூலிகை செடி தேவைப்பட்டாலும் வெளியில் தேடுவதை வழக்கமாக இன்றும் வைத்துள்ளோம். அதனை தவிர்த்து அனைவரின் வீட்டிலும் நமது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய மூலிகை செடிகளை வளர்த்து வரலாம். அந்த வகையில் பல வகையான மூலிகை செடிகளின் (mooligai names in tamil) சிறப்பம்சங்களை விரிவாக படித்தறியலாம்..!
மூலிகை செடி வகைகள்/ Mooligai Names in Tamil/ Mooligai Chedi Names in Tamil:
மூலிகை செடிகள் படங்கள்
மூலிகை / Mooligai
மூலிகைகள் பயன்கள்/ Mooligai Payangal in Tamil
அகத்தி கீரை
அகத்தி இலையிலிருந்து தைலமும், அகத்தி பட்டை சாறு சிரங்குகளுக்கு மருந்தாகவும், அகத்தியின் வேரினை அரைத்து மூட்டுவலிக்கு பயன்படுத்தலாம்.
அகில்
அகில் மரத்தின் பட்டையானது உடலில் வெப்பத்தை குறைத்து கல்லீரலில் பித்த நீரை அதிகரிக்கும். மேலும் ஒற்றை தலைவலி, மண்டையிடி, காய்ச்சல், சரும நோய், படை போன்ற நோய்களை குணப்படுத்தும்.
அமுக்கிரா
உடலில் கட்டிகள் உள்ள பகுதிகளில் இந்த அமுக்கிரா இலையினை அரைத்து பூசி வர கட்டிகள் அமுங்கிவிடும்.
அத்தி
உடலில் இரத்தம் அதிகரிக்க தினமும் அத்தி பழம் இரண்டு சாப்பிட்டு வரலாம். அத்தி இலையினை காய வைத்து இடித்து தேனில் கலந்து குடித்துவர பித்தம் குணமாகும்.
அதிமதுரம்
அதிமதுரமானது கண் நோய், எலும்பு நோய், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்திவிடும். மேலும் இதனுடைய வேர் பகுதி காக்கை வலிப்பு, மூக்கு பகுதியில் இரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்ற அனைத்து நோய்களையும் சரிசெய்யும்.
அதிவிடயம்
சுரம், அதிசாரம், அஜீரண கோளாறுகள் போன்றவற்றிற்கு அதிவிடயத்தைப் பயன்படுத்தலாம். மேலும் தீராத இருமல், வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு அதிவிடய பொடியுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
அப்ரமாஞ்சி
இதன் தண்டு பகுதிகள் மற்றும் வேர் பகுதிகள் மருத்துவ குணம் நிறைந்துள்ளதால் தூக்கமின்மையை தடுக்கும். மேலும் மனதில் படபடப்பு தன்மையை நீக்கி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அப்ரமாஞ்சி காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பய உணர்வு போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
அந்திமல்லி
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்சனைக்கு அந்திமல்லி சாறுடன் தேன் கலந்து குடித்து வர வெள்ளைப்போக்கு குணமாகும். உடல் பலத்துடன் இருக்க அந்திமல்லி கிழங்கை நன்றாக கழுவிய பிறகு நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரலாம்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி குடலில் உள்ள பூச்சுகளை அகற்றும். நீண்ட நாளாக ஆறாமல் இருக்கும் காயங்களை ஆற்றிவிடும். சுவாச பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கும். இந்த அம்மான் பச்சரிசி பெண்களுக்கு பால் சுரப்பியினை அதிகரிக்கும்.
மூலிகைகள் பயன்கள்/ Mooligai Payangal in Tamil:
மூலிகை செடிகள் படங்கள்
மூலிகை / Mooligai
மூலிகைகள் பயன்கள்/ Mooligai Payangal
பேரரத்தை செடி (அரத்தை மூலிகை)
நெஞ்சு சளி குணமாக அரை டீஸ்பூன் அளவு அரத்தை பொடியினை தேனில் கலந்து குடித்துவர நாள்பட்ட நெஞ்சு சளி குணமாகும். காய்ச்சல், தீராத தலைவலி, இருமல் போன்றவைக்கு சிறந்த மூலிகையாக அரத்தை விளங்குகிறது.
அரைக்கீரை
அரைக்கீரையானது அனைவரும் சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்று. அரை கீரை காய்ச்சல், சளி, கப நோய் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து. மேலும் அரை கீரையானது பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் இளைப்புக்கு இந்த கீரை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
அருகம்புல்
இந்த அருகம்புல்லானது வாத நோய், பித்தம், சளி, கண் சம்மந்த பிரச்சனை, பூச்சி கடி போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக திகழ்கிறது அருகம்புல். மேலும் உடல் அரிப்பு, வியர்வை நாற்றம் நீங்க, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அருகம்புல் சிறந்த மருந்தாக உள்ளது.
அசோகு (அசோக பூ)
இந்த அசோக மர பூவானது ரத்தபேதி, சீதபேதி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, வயிற்று வலி, சர்க்கரை/ பித்த நோய், சிறுநீரக கோளாறுகள், கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இந்த அசோக மரப் பூ விளங்குகிறது.
அரிவாள்மனைப் பூண்டு
இந்த அரிவாள்மனை பூண்டு மூலிகையானது வெட்டுப்பட்ட காயங்கள், புண்களுக்கு மிக சிறந்த மூலிகை மருந்தாக விளங்கி வருகிறது.
அவுரி
அவுரி இலையினை அரைத்து பாம்புக்கடிக்கு முதலுதவியாக செய்யலாம். மேலும் மஞ்சள் காமாலை, தோல் சம்மந்த நோய்கள், அலர்ஜி போன்றவற்றிற்கு இந்த அவுரி இலையினை பயன்படுத்தி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அறுகு
இந்த அறுகானது வாதம், பித்த நோய், சளி, கண்களில் ஏற்படும் புகைச்சல், பூச்சு கடி போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>