Nail Polish Side Effects Body in Tamil
இயல்பாக பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதற்காக முகத்தில் அப்ளை செய்யும் கிரீம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ, கைக்கு போடும் மருதாணி, நகத்தில் அப்பளை செய்யும் நெயில் பாலிஷ் என்று அழகுக்காக பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் இரசாயணம் பொருட்கள் கலக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நீங்கள் அப்படி பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் உங்களை அழகாக அந்த தருணத்தில் காட்டினாலும், நாளடைவில் உங்களது உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது உண்மை. உங்களுக்கு உதவும் வகையில் நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க!.
நுரையீரல் பிரச்சனை ஏற்படுத்தலாம்:
நெயில் பாலிஷில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதனுடைய வாசம் தோல் மற்றும் நுரையீரலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டை கூட பாதிக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் விரல் நகம் சொல்லும் நோய்..!
புற்றுநோய் பிரச்சனை:
நெயில் பாலீஷில் இருந்து வரும் வாசனை நிறைய நபர்களுக்கு பிடிக்கும். இதில் வாசனைக்காக சேர்க்கப்படும் பார்மால்ஹைடு என்னும் வேதி பொருள் புற்றுநோய் பிரச்சனையை ஏற்படுத்தும்.
நகத்தில் கோடுகள்:
நெயில் பாலிஷ் தொடர்ந்து பயன்படுத்துவதால் நகங்களின் அழகை பாதிக்க செய்யும். அதாவது நகம் பலம் இல்லாமல் சீக்கிரமாக உடைந்து விடும். மேலும் நகத்தில் பளபளப்பு தன்மை இல்லாமல் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.
நகத்தை பராமரிப்பது எப்படி.?
நகத்தை வாரத்தில் ஒரு முறையாவது வெட்டி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நகத்தில் அழுக்கு இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும். நகத்தில் அழுக்குகள் இருந்தால் அதனோடு சாப்பிடுவீர்கள். அப்போது நெயில் பாலிஷ் மற்றும் நகத்தில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்று வயிற்று வலி, வாந்தி, பேதி, டைபாய்டு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நகங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நகத்தை உடையாமல் பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
நகங்களில் செயற்கை முறையில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்க கூடிய மருதாணி போன்றவற்றை பயன்படுத்துங்கள். மருதாணி போடுவதால் பித்தம் மற்றும் எரிச்சலை குணப்படுத்தும், நகங்களை பலப்படுத்தும், நன்றாக தூங்குவீர்கள், மன அழுத்தத்தை குறைக்கும்.
நகத்திற்கு நெயில் பாலிஷ் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்துடுங்கள். இயற்கை முறையில் உங்களின் அழகை மேம்படுத்துங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ அழகான மற்றும் நீளமான நகம் வேண்டுமென்றால் இப்படி பண்ணுங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |