காலையில் நீராகாரம் குடிப்பதில் இவ்வளவு உள்ளதா அதா அந்த காலத்தில் காலையில் இதை குடித்திருப்பார்கள் போல

neeragaram benefits in tamil

நீர் ஆகாரம்

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் நீர் ஆகாரம் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக அந்த காலத்தில் டீ காபி போன்றவைகள் எதுவுமே இல்லை அதனால் காலையில் அனைவருமே நீர் ஆகாரம் தான் குடிப்பார்கள். அது என்ன நீர் ஆகாரம் என்று நினைப்பீர்கள். அது முக்கியம் அல்ல இப்போது தாத்தா பாட்டிகள் அனைவருமே இப்போதும் நீர் ஆகாரம் குடிப்பதை பார்த்தீர்ப்பார்கள். சிலருக்கு நீர் ஆகாரம் என்றால் என்னவென்று தெரியாது அப்படி என்றால் என்ன அதனை காலையில் குடித்தால் என்ன நன்மைகள் நடக்கும் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

நீர் ஆகாரம் நன்மைகள்:

இந்த நீர் ஆகாரம் குடிப்பதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அதேபோல் இதில் வைட்டமின் கே, பி, அமினோ ஆசிட்ஸ் இது அனைத்தும் நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. புரோ பயாட்டிக், இனோசிட்டால் போன்ற சத்துக்கள் அனைத்துமே இந்த நீர் ஆகாரத்தில் உள்ளது. அதனால் காலையில் தினமும் குடித்தால் உடலில் தேவையில்லாத நுண்ணுயிரிகளை அளிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல். நம் உடலில் முக்கியமான உறுப்பு என்றால் அது குடல் தான் அதனை பாதுகாத்து சரியாக இயங்க உதவுகிறது.

அதேபோல் குடலில் உள்ள  நல்ல நுண்ணுயிரிகளை பாதுகாத்து குடலை பாதுகாக்க இந்த நீர் ஆகாரம் உதவுகிறது.

காலையில் தினமும் நீர் ஆகாரம் குடிப்பதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.

இனோசிட்டால் என்பது என்னவென்று யாரும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் இது உடலில் என்ன செய்கிறது என்றால் நம்முடைய கிட்னியில் ஒவ்வொரு நாளும் சேர்ந்துகொண்டு இருக்கும். அதனால் நரம்புகளுக்கு எல்லாம் பலத்தை கொடுக்கிறது. அதேபோல் ஹார்மோன் உற்பத்தியிலும் இது முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் சூட்டை குறைகிறது, முடி கொட்டுவதை  தடுக்கிறது, முகப்பரு பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.

ஆகையால் தினமும் நீர் ஆகாரம் குடிப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கும் என்பதை தெரிந்துகொண்டோம் இனி யார் வீட்டிலும் காலையில் டீ காபி பூஸ்ட், ஹார்லிக்ஸ் இருக்காது என்று நினைக்கிறேன்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்