நீங்கள் Night duty பார்ப்பவரா.! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்

Night Duty Health Problems

இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறோம். பகல் நேரத்தில் வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் இரவு நேரம் முழுவதும் கண் விழித்து வேலை பார்த்தால் நம் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது என்னென்ன பிரச்சனைகள் என்று  இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.

Night Shift Health Problems

Night Shift Health Problems in tamil

மார்பக புற்றுநோய்:

மார்பக புற்றுநோய்

பகல் நேரத்தில் வேலை செய்யும் பெண்களை விட, இரவு நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவு நேர வேலையை குறைத்து கொள்ளவும். எப்படி குறைக்கிறது என்று கேட்கறீர்களா.! மாதம் முழுவதும் இரவு நேரம் வேலை பார்க்காமல் மாதத்தில் ஒரு முறை இரவு நேர வேலையை செய்யவும்.

மாரடைப்பு:

மாரடைப்பு

2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. தூக்கம் இல்லாததால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடல் சோர்வு:

உடல் சோர்வு

இரவு நேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் மனதும், உடலும் சோர்வடையும்.

இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா..!

காயம்:

இரவு நேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலை பார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்க சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவன சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோய் பிரச்சனை:

சர்க்கரை நோய் பிரச்சனை

இரவு நேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படும்.

குடல் பிரச்சனை: 

குடல் பிரச்சனை

வயிற்றுப்போக்கு மற்றும் அல்சர், இரைப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தும்.

தூக்கமின்மை பிரச்சனை:

நீங்கள் இரவில் வேலை செய்து விட்டு பகல் நேரத்தில் தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதால நாளடைவில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் வரமால் தடுப்பதற்கு:

முதலில் இரவு நேரம் வேலை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

இரண்டாவதாக பகலில் தூங்குவதை நன்றாக தூங்க வேண்டும். அதாவது ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் ன்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரவு நேரத்தில் வேலை பார்க்கும் போது காபி குடிப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

இரவு நேரம் நேரம் வேலை பார்க்கும் போது எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஈசியாக செரிக்க கூடிய உணவுகளாக எடுத்து கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் பாத எரிச்சல் அதிகமாக இருக்கின்றதா? அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் இதோ..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்