நூல்கோல் மருத்துவ பயன்கள் | Noolkol Health Benefits in Tamil
நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிகமாக உணவில் யாரும் சேர்த்துக்கொள்வதில். ஆனால் இதில் தான் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கக்கூடிய வேர் மற்றும் இலை இரண்டையும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். குளிர்காலங்களில் சாப்பிடக்கூடிய ஏற்ற காய் வகையாக இருக்கிறது. இதனை பல பேர் உணவில் ஒதுக்கி வைக்கிறார்கள். இதனுடைய நன்மைகளை தெரிந்தால் இனிமேல் யாரும் ஒதுக்கி வைக்கமாட்டீர்கள். இந்த நூல்கோல் காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
| பூசணி விதை நன்மைகள் |
சரும ஆரோக்கியத்திற்கு:

குளிர் காலத்தில் ஒரு சிலருக்கு சருமம் பாதிப்படைந்து காணப்படும். சருமத்தில் உள்ள தோல் பகுதிகள் வறண்டு போய் சுருக்கம் ஏற்பட்டு கோடுகள் போன்று காட்சி தரும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சரும பிரச்சனைகளை வர விடாமல் தடுத்து நிறுத்தும்.
இதய பிரச்சனைக்கு:

இதய சமபந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த நூல்கோல் காய்கறியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பினை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கும். இந்த காயில் மற்றும் இலையிலும் அதிக அளவிலான ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் இதயத்தை பாதுகாப்போடு வைத்து மாரடைப்பு பிரச்சனை வராமல் தடுக்கிறது.
உடல் எடை குறைய:

உடலில் அதிகமாக எடை கூடுவதன் முக்கிய காரணம் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வது தான். இந்த நூல்கோல் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவை சரியாக வைத்து உடல் எடையையும் குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் கலோரி குறைந்த அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் இந்த நூல்கோலை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.
| மாசிக்காய் பயன்கள் |
புற்றுநோய் குணமாக:

புற்றுநோய் பிரச்சனையானது ஆண்கள் மற்றும் பெண்கள் சரி சமமாக சந்திக்கக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த நூல்கோல் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதை முற்றிலும் தடுத்து நிறுத்தலாம். அதுமட்டுமல்லாமல் உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்கள் மற்றும் வலிகளை குறைக்கும் ஆற்றல் கொண்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த நூல்கோலை சாப்பிட்டு வருவதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களை குணப்படுத்தலாம்.
இரத்த அழுத்தம் குறைய:

பொட்டாசியம் சத்து நூல்கோலில் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சற்று உடலுக்கு நூல்கோல் தீமை விளைவிக்கும் என்பதால் மற்ற காய்கறிகளை போலவே இதனையும் அளவுடன் எடுத்துக்கொண்டால் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

இவற்றில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
மேலும் இவற்றில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க செய்கிறது. நமது பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
இவற்றில் நார்சத்து நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனை வராமல் காக்கிறது. அதுமட்டுமில்லாமல் வயிற்று போன் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் பாக்டீரியாவை எதிர்க்கவும் உதவுகிறது.
நுரையீரல் பிரச்சனை:
மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் மூச்சு விடுவதற்கு ரொம்ப சிரமமாக இருக்கும். அந்த காலத்தில் நூல்கோல் சிறந்த தீர்வினை தருகிறது. நூல்கோலின் மேலுள்ள தண்டும் அதன் மேலுள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றது.
துர்நாற்றம் நீங்க
பலருக்கும்உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். இதற்காக பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்கள். இவை கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் வாசனையை கொடுக்கும். அதனால் இயற்கையான முறையில் நூல்கோல் ஜூஸ் குடிப்பதன் மூலம் நம்முடைய உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை சரி செய்வதற்கு உதவுகிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |














