சுகப்பிரசவத்தின் அறிகுறிகள் | Normal Delivery Symptoms in Tamil

Normal Delivery Symptoms in Tamil

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் | Labour Pain Symptoms in Tamil

Baby Delivery Symptoms in Tamil: கர்ப்ப காலத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பது அவர்களின் உடல் நலத்திற்கும், எதிர்காலத்திற்கும், மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கடைசி மாதத்தில் (10-ம் மாதம்) தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். உடம்பில் ஏற்படும் ஒவ்வொரு அறிகுறிகளுமே பிரசவம் நிகழப்போகிறது என்பதை உணர்த்தும். அப்படி என்ன விதமான அறிகுறிகள் தென்பட்டால் சுகப்பிரசவம் ஆகப்போகிறது என்பதை இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்:

labour pain symptoms in tamil

 • பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்: கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான், ஆனால் பிரசவத்தின் போது முதுகில் இயல்பான வலியை விட அதிக வலி இருக்கும்.
 • பிரசவம் ஆவதற்கான இரண்டாவது அறிகுறியாக செர்விக்ஸ் விரிவடைய ஆரம்பிக்கும். செர்விக்ஸ் விரிவடையும் போது உங்கள் உடலில் மாற்றம் ஏற்படும் அதை உங்களால் உணர முடியும்.
 • குழந்தை வளர்ச்சி அடைந்து வெளிவர முயற்சிக்கும், அப்பொழுது குழந்தையின் தலை திரும்பி செர்விக்ஸ் பகுதியில் அழுத்தம் ஏற்படும். இந்த பகுதியில் இருந்து வெள்ளை நிற திரவம் அல்லது இரத்தம் வெளிப்படும். இது போன்ற திரவம் அல்லது இரத்தம் வெளிப்பட்டால் அது சுக பிரசவத்திற்கான அறிகுறிகள் ஆகும். இருப்பினும் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த அறிகுறிகள் இருப்பதில்லை.

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்:

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்

 • Normal Delivery Symptoms Tamil: குழந்தை வெளிவர முயற்சிக்கும் போது கர்ப்பிணி பெண்களின் பெல்விக் பகுதி தளர்ச்சி பெறுவது அதாவது இடுப்பு எலும்புகள் தளர்ச்சி அடைய ஆரம்பித்து விடும் இதுவும் சுக பிரசவத்திற்கான அறிகுறிகளே.
 • பிரசவம் நிகழப்போவதற்கு முன்னர் வரைக்கும் பெண்கள் மிகவும் சோர்வாகவும், சக்தி குறைவாகவும் இருப்பார்கள், ஆனால் சுகப்பிரசவத்திற்கான அறிகுறிகள் தென்படும் பெண்களுக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பிரசவத்தைத் தாங்க கூடிய சக்தி உடலில் இயற்கையாக உற்பத்தியாகிவிடுமாம்.
 • பத்தாம் மாதத்தில் குழந்தையின் தலை திரும்பி இடுப்பு பகுதியில் அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதால் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு இருக்கும். பிரசவமாக போகும் கால கட்டத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் வலி ஏற்படும். ஒரு சில பெண்களுக்கு இந்த வலி ஏற்படுவதில்லை.

Normal Delivery Symptoms in Tamil:

delivery symptoms in tamil

 • Delivery Time Symptoms in Tamil: பிரசவ நேரத்தை நெருங்கும் போது கருப்பை வாய் (செர்விக்ஸ்) பகுதி மெல்லியதாக மாறிவிடும், அப்பொழுது தான் குழந்தை அந்த பகுதியின் வழியாக வெளிவர முடியும்.
 • சுகப்பிரசவம் ஆக போகும் நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி இருக்கும், அப்போது கர்ப்பிணி பெண்களின் வயிறு கீழே இறங்கி இருக்கும். இதை வைத்தும் நீங்கள் சுகப்பிரசவம் ஆகப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.
 • ஒரு சில பெண்களுக்கு மலம் வருவது போன்ற உணர்வு இருக்கும், குழந்தையின் அசைவு குறைய ஆரம்பிக்கும், கருப்பை சுருங்க ஆரம்பிக்கும் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அது சுகப்பிரசவத்தின் அறிகுறிகளே ஆகும்.

Labour Pain Symptoms in Tamil:

delivery symptoms in tamil

 • Symptoms of Labour Pain in 9th Month: Amniotic எனப்படும் திரவத்தில் தான் குழந்தை வாழும். இது எந்த விதமான நிறமும், மனமும் இன்றி சிறுநீர் போல இருக்கும். இதுவும் பிரசவம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக உள்ளது.
 • பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும், அப்பொழுது ஒரு விதமான திரவம் வெளிப்படும். இந்த அறிகுறி தென்பட்டவுடன் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
 • பிரசவமாக போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறியே பிரசவ வலி தான். உண்மையான பிரசவ வலி 10 நிமிடத்திற்கு ஒரு முறை வரும். இது அடி வயிற்றில், இடுப்பில் வலி ஏற்படும். இது போன்று ஏற்பட்டால் அது உண்மையான பிரசவ வலி.
 • இடைவெளி இல்லாமல் வயிற்றில் வலி ஏற்பட்டால் அது பிரசவ வலி கிடையாது.
சுக‌ப்பிரசவம் ஆகணுமா?
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in tamil