தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்..! Belly Button Massage Benefits..!
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தொப்புளில் எண்ணெய் வைப்பதினால்(Belly Button Oiling Benefits) ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நமது உடலில் முக்கியமான பகுதி தொப்புள் பகுதியாகும். 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட பகுதிதான் இந்த தொப்புள் பகுதியானது. நாம் தினமும் இரவில் தூங்கும் முன் தொப்புளில் எண்ணெயை வைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அது என்னென்ன நன்மை விஷயங்கள் உள்ளது என்பதை பற்றி இன்றைய பதிவில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
![]() |
தொப்புளில் எண்ணெய் வைப்பதால்:
தொப்புளில் எண்ணெய் வைப்பதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. உடலில் ஏற்படும் வெப்ப தன்மை நீங்கும். உடல் சூட்டினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, கண்களில் ஏற்படும் வறட்சி தன்மை, பாதத்தில் இருக்கும் பித்த வெடிப்பு, முழங்கால் மூட்டுவலி, உடல் நடுக்கம், உடல் எப்போதும் சோர்வாக இருப்பது, இது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு வகிக்கிறது.
எள்ளு எண்ணெயின் நன்மை:
உடலில் ஏற்படும் வெப்பத்தன்மையால் வயிறு வலி போன்ற பிரச்சனை அனைவருக்கும் வருவது இயல்பானது தான். அதற்கு எள்ளு எண்ணெயை 1 சொட்டு வயிற்றில் சுற்றி அதாவது ஒன்றரை அங்குலம் நன்றாக தேய்த்து வரவேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த எள்ளு எண்ணெய்க்கு வாதம் உள்ளவர்கள், பித்தம், கபம் கொண்டவர்களுக்கும் எள்ளு எண்ணெய் உடலை சமநிலை படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கிறது.
கடுகு எண்ணெயின் நன்மை:
சிலருக்கு உதட்டில் எப்போதும் வெடிப்பு தன்மை இருந்துகொண்டே இருக்கும். அந்த வெடிப்பு தன்மை நீங்க கடுகு எண்ணெயை தொப்புளில் தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்த்து வந்தால் கண்டிப்பாக வறட்சி தன்மை நீங்கி விடும்.
தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் கை, கால்களில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும். அதோடு மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கு இந்த பிரச்சனை குணமாகும்.
நரம்பு தளர்ச்சி சிலருக்கு இருக்கும். இந்த பிரச்சனை குணமாக தொப்புளில் கடுகு எண்ணையை தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும் நடுக்கங்கள், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமடைய செய்யும்.
![]() |
வேப்ப எண்ணெயின் நன்மை:
முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் தொப்புளில் தேய்த்து வந்தால் உடனடியாக பருக்கள் மறைந்து விடும். அதுமட்டும் இல்லாமல் சருமத்தில் ஏற்படும் தேமல், தோல் வறட்சி, தோல் காந்தள், போன்ற அனைத்து சரும பிரச்சனைக்கும் தொப்புளில் வேப்ப எண்ணெய் தேய்த்து வந்தால் சரும பிரச்சனை சரியாகி விடும்.
நெய்யின் நன்மை:
நெய்யினை தொப்புளில் தேய்த்து வர சருமத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கும். அதோடு முகத்தினை எப்போதும் பொலிவோடும் வைத்திருக்கும்.
தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயின் நன்மை:
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை தொப்புளில் இட்டு தேய்த்து வந்தால் ஆண், பெண் மலட்டு தன்மை நீங்கும். பெண்களுக்கு இருக்கும் கர்ப்பபை இந்த எண்ணெய் தடவுவதால் நன்றாக பலன் அடையும்.
குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் மிகவும் பலன் அளிக்கும் சக்தியை உடையது.
அதோடு தொடர்ச்சியாக கருச்சிதைவு பிரச்சனை உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் இரவு தூங்கும்முன் தொப்புளில் ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் இந்த கருச்சிதைவு பிரச்சனை விரைவில் குணமாகும்.
விளக்கெண்ணையின் நன்மை:
விளக்கெண்ணெயை தடவி வந்தால் தலை முடி அதிகமாக கொட்டுதல் நீங்கும் முடி நன்றாக வளர்ச்சி பெரும். உடலில் எப்போதும் சோர்வு தன்மையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
மூட்டுவலி பிரச்சனை இருந்தால் தொப்புளில் விளக்கெண்ணெயை தேய்த்து வர மூட்டுகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும். மூட்டு வலியும் விரைவில் குணமாகும்.
அவ்ளோதாங்க தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்ளோ நன்மைகள் அடங்கியுள்ளது. இதை எல்லாரும் ட்ரை பண்ணுங்க.
![]() |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |