ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

Orange Juice Side Effects 

Orange Juice Side Effects 

நாம் அனைவருக்கும் பெரும்பாலும் பழத்தினை சாப்பிடுவதை விட அதனை ஜூஸாக குடிப்பது தான் பிடித்து இருக்கிறது. ஏனென்றால் பழம் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருப்பது இல்லை. ஆனால் அதுவே அதனை ஜூஸாக செய்து குடிக்கும் போதும் அதில் சேர்க்கப்படும் ஒரு சில பொருள்களின் சுவையானது நம்மை மீண்டும் மீண்டும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஈர்க்கிறது. இவ்வாறு இருக்கையில் இப்போது கோடைகாலம் ஆரம்பமாகி விட காரணத்தினால் அனைவரும் டீ, காபிக்கு பதிலாக ஜூஸினை தான் விரும்புகிறார்கள். அத்தகைய ஜூஸ் வகைகளில் ஆரஞ்சு பழ ஜூஸும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடவில்லை என்றால் உடனே நாம் அதனை ஜூஸாக செய்து இதிலும் சத்துக்கள் தான் இருக்கிறது என்று குடிக்க வைத்து விடுகிறோம். ஆனால் ஆரஞ்சு பழ ஜூஸில் நன்மைகள் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவிற்கு சில தீமைகளும் அதில் காணப்படுகிறது. ஆகவே இன்றைய ஆரோக்கிய பதிவில் ஆரஞ்சு பழ ஜூஸின் தீமைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்:

ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்

 ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C, வைட்டமின் A, கலோரிகள், கார்போஹைட்ரெட், பொட்டசியம், புரதம், நார்ச்சத்து, சர்க்கரை, தாமிரம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. 

ஆரஞ்சு ஜூஸ் தீமைகள்:

உடல் பருமன் அதிகரிக்க:

உடல் பருமன் அதிகரிக்க

 

ஒரு முழு ஆரஞ்சு பழத்தில் 62 கிராம் கலோரிகள் உள்ளது. ஆகையால் நாம் தினமும் ஆரஞ்சு பழ ஜூஸினை குடிப்பதனால் அதில் உள்ள கலோரி சத்தானது நம்முடைய உடலில் உள்ள கலோரியுடன் சேர்ந்து அதிகப்படியான கலோரிகளை உருவாக்குகிறது. இதன் விளைவாக நம்முடைய உடல் எடையானது விரைவில் அதிகரிக்க செய்கிறது.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்:

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

 

ஆரஞ்சு பழ ஜூஸ் ஒரு சிலவற்றைக்கு நன்மையினை அளிக்கக்கூடியதாக இருந்தாலும் கூட அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் சில தீமையினையும் அளிக்கிறது.

அதாவது ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இதனை ஜூஸாக செய்து நாம் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது வயிற்று போக்கு மற்றும் வயிறு பிடிப்பு என வயிறு சம்மந்தப்பட்ட தீமைகளை அளிக்கிறது.

கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..

நெஞ்சு எரிச்சல்:

நெஞ்சு எரிச்சல்

 

நாம் குடிக்கும் ஆரஞ்சு பழ ஜூஸில் பிரக்டோஸ் இருப்பது போல அதில் அமிலத்தன்மையும் உள்ளது. இத்தகைய அமிலத்தன்மை வாய்ந்த ஜூஸினை நாம் அதிகமாக குடிக்கும் போது நெஞ்சு எரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தூக்கமின்மை காரணம்:

தூக்கமின்மை

உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் ஆரஞ்சு பழச்சாற்றில் இருந்தாலும் கூட அதனை சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அதில் காணப்படும் சில சத்துக்கள் நமக்கு தீமையினையும் தருகிறது. ஆகவே ஆரஞ்சு பழச்சாற்றினை அளவோடு எடுத்துகொள்ளவில்லை என்றால் அதில் அமிலத்தன்மையானது தூக்கிமின்மை பிரச்சனை வருவதற்கு காரணமாக அமைகிறது.

தலைவலி:

தலைவலி

பொதுவாக நம்முடைய உடலில் அமிலத்தன்மை என்பது சிறிதளவு காணப்படும். ஆகையால் நாம் அமிலத்தன்மை உள்ள உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதனால் உடலில் தலைவலி மற்றும் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஆரஞ்சு பழசாற்றினாலும் இதுபோன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படியுங்கள்⇒ பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிக்கிறீங்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil