கணையத்தை பலப்படுத்தும் உணவு முறைகள் என்ன என்பதை பார்க்கலாம்..!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் தகவல் பற்றித்தான். அந்த தகவல் என்னவென்றால் கணையத்தை பலப்படுத்தும் உணவு முறைகள் என்ன என்பதை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். கணையம் என்பது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். அதனை பாதுகாப்பதற்கான உணவுமுறைகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கணையம் என்றால் என்ன ?
நம்மில் பலருக்கும் கணையம் என்றால் என்ன ? அதன் பணி என்ன என்றும் தெரியாது அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். கணையம் என்பது நமது உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பியாகும். அதைப்போன்று இதன் பணியும் மிகப்பெரியது. அந்த பணி என்னவென்றால் உணவை செரிக்க வைக்க உதவும் நொதிகளை சுரக்கின்றது.
கணையம்தான் உணவில் உள்ள சத்துக்களை பிரித்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புவது. அதுமட்டுமில்லாமல் கணையம்தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து கோலா உதவும் இன்சுலின் எனும் புரதத்தை சுரக்கின்றது.
கணையத்தை பலப்படுத்த உதவும் உணவுகள்:
இவ்வளவு வேலைகளை செய்கின்ற கணையத்தில் எவ்வாறு நச்சுக்கள் சேராமல் இருக்கும். எனவே கணையத்தை ஆரோக்கியமாகவும், பலமாகவும் வைத்திருக்க ஒரு சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர்:
ப்ராக்கோலி , காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல்கீரை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
பூண்டு :
மேலும் அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும்.
மஞ்சள் :
அடுத்து மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளதால் இது கணையத்தை பலப்படுத்த உதவுகின்றது.
சிவப்பு திராட்சை:
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்னும் பொருள், கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும்.
காளான் :
காளானில் உள்ள நார் சத்து, செலினியம், பொட்டாசியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவைகளால் கணையம் பலப்படுத்தப்படுகின்றது.
ப்ளூபெர்ரி:
ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால் கணையத்தை பலப்படுத்த உதவுகின்றது.
தயிர்:
அடுத்து தயிர் கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
பசலைக்கீரை:
பசலைக்கீரை கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் கொண்டுள்ளது . வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் என்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த சத்துக்கள் கணையத்தில் புற்றுநோய் உருவாவதை தடுக்கும்.
தக்காளி:
தக்காளியில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, கணைய புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
டோஃபு:
டோஃபுவில் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே டோஃபுவை பிடித்தவாறு சமைத்து உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இதையும் பாருங்கள் => உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |