அன்னாசி பழம் சாப்பிடும் முறை
பொதுவாக பழங்களை அதிகம் சாப்பிடுபவர்கள் இந்த பழத்தை விரும்பி சாப்பிடமாட்டார்கள் அதற்கு காரணம் அதை சாப்பிடால் நாக்கில் அதனுடைய முள் குத்தும் இரண்டாவது நாக்கு அரிக்கும் என நினைத்து சாப்பிட மறுப்பார்கள். ஆனால் சிலருக்கு இந்த பழமானது மிகவும் பிடிக்கும். ஏன் நானும் இந்த பழத்தை தான் சாப்பிடுவேன்.
இதெல்லாம் நான் கேட்டேனா என்று நினைக்கலாம். என்னதான் இருந்தாலும் என்னுடைய வார்த்தைகளை படிக்கிறீர்கள் அப்போது நீங்களும் என்னுடைய நண்பர்தானே அதனால் அப்படி சொல்கிறேன், சரி விடுங்கள் இப்போது அன்னாசிப்பழத்தை இப்படி சாப்பிட்டால் என்ன நன்மை ஏன் அப்படி சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்வோம்..!
அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
அன்னாசிப் பழத்தின் சதையில் இருக்கும் ப்ரோமைலின் உடலுக்கு தேவையுள்ள புரதங்களை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமில்லாமல் இதனை உட்கொள்வதால் தசைகளில் உள்ள வலிகளை போக்குகிறது.
தினமும்அன்னாசிபழம் சாப்பிடுவதால் கை, கால் வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் நாள்தோறும் உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் இருக்காது.
உடலில் ஏற்படும் காயங்களையும் ஆற்றும் தன்மை கொண்டது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
அன்னாசியில் உள்ள ப்ரோமைலின் ரத்த அணுக்களை சரிசெய்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
உப்பு கலந்த நீர்:
இந்த உப்பு தண்ணீரில் பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் ப்ரோமைலின் தன்மையை செயலிழக்க செய்கிறது. ஆகவே சிறிதளவு உப்பில் பழம் சேர்ப்பதால் பழத்தின் இனிப்பு தன்மையை அதிகப்படுத்தி ருசியை அதிகரிக்கிறது.
உப்பு நீர் அன்னாசி பழம்:
அன்னாசிப்பழத்தை முதலில் ஒரு கிண்ணத்தில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து 1 நிமிடம் ஊறவைக்கவும்.
இப்படி சாப்பிடுவதால் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தாது என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா ரோஹத்கி கூறியுள்ளார்.
அன்னாசிப் பழத்தை உப்பு நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் சிலருக்கு உடலில் அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. இது ஆஸ்மா உள்ளவர்களுக்கு பயனளிக்கிறது.
உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்:
இந்த அன்னாசி பழத்தை துண்டாக வெட்டிக்கொண்டு, ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு நாள் அதில் ஊறிய பின் அதனை மறுநாள் பருகினால் உடலில் தேவையில்லாதா கொழுப்புகள் குறைந்துவிடும்.
குறிப்பு: சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |