பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்? | Piththam Kuraiya Tips in Tamil

Advertisement

பித்தம் குறைய என்ன சாப்பிடலாம்? | Piththam Kuraiya Enna Seiya Vendum

நண்பர்களே இன்று ஆரோக்கியம் பதிவில் பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகிறோம். பித்தம் என்பது நம் சாப்பிடும் உணவுகளின்  செரிமானத்திற்கு உதவுகிறது. என்னதான் உதவிகளை செய்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி என்று சொல்வார்கள் அது போல் தான் இந்த பித்தமும் அளவுக்கு அதிகமானால் உடலுக்கு பிரச்சனைகளை தரும். முக்கியமாக பித்தம் அதிகமானால் மயக்கம் அதிகமாகும். அதனால் இப்போது இந்த பதிவில் பித்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.

பித்தம் அறிகுறிகள்

இஞ்சி பயன்கள்:

இஞ்சி பயன்கள்

  • பொதுவாக இஞ்சி சாப்பிடுவதால் உணவுகள் மிக விரையில் செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே இஞ்சி ஒரு துண்டு சாப்பிட்டாலும் போதும் உங்கள் பித்தத்தை உடனே குறைக்க உதவுகிறது. மேலும் இந்த இஞ்சியை சாப்பிடுவதினால் வயிற்று பகுதியில் தசைகளுக்கு அதிகம் சத்துக்களை தரும்.

எலுமிச்சை பயன்கள்:

எலுமிச்சை பயன்கள்

  • எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்து வந்தால் அதிகம் உடலில் பித்தம் சேர்வதை தடுக்கலாம்.. பித்தம் அதிகமானால் முதலில் வாந்தி தான் வரும். அதற்கு முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை முகர்ந்து பார்க்க சொல்வார்கள் இதற்கு என்ன காரணம் என்றால் எலுமிச்சை பழத்தில் பித்தத்தை குறைக்க சத்துக்கள் அதிகம் உள்ளதாம் அதனால் தான் அப்படி சொல்வார்கள்.

​கருஞ்சீரகம் நன்மைகள்:

​கருஞ்சீரகம்

  • கருஞ்சீரகத்தை அதிகம் உணவில் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் அதிகம் ஐயர் வீட்டில் பயன்படுத்துவார்கள். இதனை நாம் உணவில் தினமும் தனியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை ஆனால் நீங்கள் சாதம் வடிப்பதில் சிறிது சேர்ந்து அதனை வடித்து சாப்பிட்டால் போதும் இதில் பித்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இந்து உப்பு பயன்கள்:

இந்து உப்பு பயன்கள்

 

  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்களில் சோடியம் நிறைந்திருக்கும். அதனால் உடலில் அதிகம் பித்தத்தை ஏற்படுத்தும் வாந்தி, அடிக்கடி மயக்கம், செரிமான கோளாறுகள் வரும். இனி தினசரி இந்து உப்பு சேர்த்துக்கொள்வதால் உடலில் அதிகம் உள்ள பித்தத்தை குறைக்கும்.
பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்..!

சீரகம் நன்மைகள்:

சீரகம் நன்மைகள்

  • பித்தத்தால் ஏற்படும் வாந்தி மயக்கம் என்றால் முதலில் வீட்டில் உள்ளவர்கள் சொல்வது கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு கொண்டு மென்று சாப்பிடு என்று சொல்வார்கள். காரணம் அதில் அதிகப்படியான செரிமானம் செய்வதற்கு சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனை தினமும் வெள்ளை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக பித்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement