கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!

கர்ப்பகால சர்க்கரை நோய்

கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!

உலக அளவில் அதிக பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் தாயையும், குழந்தையையும் பாதிக்கும். உணவுக் கட்டுப்பாடு, இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பும், சரியான ரத்த சர்க்கரையும் இருக்க வேண்டியது அவசியம். இந்த இன்சுலினிலும் ரத்த சர்க்கரையிலும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கிறது என அர்த்தம். 25 கர்ப்பிணிகளில் 1 கர்ப்பிணிக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சரி இந்த கர்ப்ப கால சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகின்றது, இந்த பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படும், அவற்றின் காரணங்கள் மற்றும் இந்த பிரச்சனைக்கான தீர்வு ஆகியவற்றை பற்றி இந்த பகுதயில்  நாம் படித்தறிவோம் வாங்க.

கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

கர்ப்பகால சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது?

 • குழந்தை வயிற்றில் கருவாக தோன்றும்போது நஞ்சுக்கொடி மற்றும் நஞ்சுப்பை தோன்றி, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.
 • கரு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சில ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பைத் தடை செய்வதுடன் இன்சுலின் கிரகிக்கும் செல்களின் ஆற்றலையும் குறைக்கின்றன.
 • கர்ப்பகால ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படுத்துவதால், தாயின் சர்க்கரை அளவு அதிகரிக்க நேரிடுகிறது.
 • குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான, அதிகப்படியான ஆற்றலை செல்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதால் இன்சுலின் தேவையும் அதிகரிக்கிறது.
 • கர்ப்பகால ஹார்மோன்களின் மாறுபாட்டால், செல்களால் இன்சுலினை பயன்படுத்த இயலாமல் போய்விடுகிறது. இதுவே கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு ஒரு முக்கிய காரணம்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

 • நடுத்தர வயதில் குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள், இவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சர்க்கரை நோய் தாக்கத்தால் பாதிக்கலாம்.
 • தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல், இன்சுலின் செல்களால் நஞ்சுப்பையை தாண்டி செல்ல இயலாததால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்திலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
 • இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்பக் காலத்திலே அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.
 • இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்பு செல்களாக குழந்தையில் தோலுக்கு அடியிலும், கல்லீரலும் சேமிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழு கொழுவென்று மாற ஆரம்பிக்கிறது.
 • இவ்வாறு கொழு கொழு குழந்தை பிரசவத்துக்குப் பின் வெளியே வந்ததும், திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கோ அல்லது குறை ரத்த சர்க்கரை நோயுக்கோ ஆளாகிறது.
 • இதனால் கர்ப்பகால சர்க்கரை நோய் (pregnancy diabetes treatment in tamil) உள்ள தாயுக்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்

கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள்:

 1. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருப்பது.
 2. தாமதமாகக் கருத்தரிப்பது.
 3. உடற்பருமன்.
 4. முந்தைய கருத்தருப்பின் போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருத்தல்.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிக்கு தேவையானது:

 • கர்ப்பகால சர்க்கரை நோய் வராமல் (pregnancy diabetes treatment in tamil) இருக்க சரிவிகித உணவு.
 • மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மருந்துகள் சாப்பிடுதல்.
 • இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்.
 • முறையான ரத்த சர்க்கரை பரிசோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.
 • உணவில் அடிக்கடி சீரகம், கருஞ்சீரகம், எள் ஆகியவற்றை அதிகமாக சேர்ப்பது நல்லது.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

கர்ப்பகால சர்க்கரை நோய் வராமல் இருக்க கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியது:

கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிகளவு கம்பு, ஓட்ஸ், சிவப்பு அரிசி, மட்டை அவல், சம்பா ரவை, கேழ்வரகு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பகால சர்க்கரை நோய் வராமல் இருக்க கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டியது?

கர்ப்பகால சர்க்கரை நோய் வராமல் (pregnancy diabetes treatment in tamil) இருக்க கர்பிணிப்பெண்கள் உணவில் அதிகளவு சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், கீரைகள், சின்ன வெங்காயம், வாழைப்பூ, வெண்டைக்காய், நூல்கோல், காராமணி, பூசணிக்காய், பிஞ்சு கத்திரிக்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதினால் இவை சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

எனவே கர்ப்பகால சர்க்கரை நோய் (pregnancy diabetes treatment in tamil) வராமல் இருக்க கர்ப்பிணிகள் அதிகளவு இவ்வகை காய்கறிகளை தினமும்  உட்கொள்ளவும்.

யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்