பின்னாடி நடப்பதால் இவ்வளவு நடக்குதா..! இனி யாரெல்லாம் பின்னாடி நடப்பீர்கள்..!

Advertisement

Back Side Walking Benefits in Tamil

யாரெல்லாம் காலை மாலையில் நடப்பது பழக்கமாக வைத்திருக்கீர்கள் அவர்களுக்கு நற்செய்தி. அப்படி என்ன செய்தி என்று நினைப்பீர்கள்..! பொதுவாக வாக்கிங் செல்வது எதற்காக என்று அனைவருக்கும் தெரியும். ஒரு சிலர் எடையை குறைக்க செல்வார்கள் இன்னும் சிலர் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று செல்வார்கள்..! ஆனால் இதனை தொடர்ந்து செய்தால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். அதேபோல் அதிகமாக செய்வது போல் இருக்கும். அதனை குறைவாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

Reverse Walking Benefits in Tamil:

பின்புறம் நடப்பதால் வழக்கமாக இருக்கும் புத்துணர்ச்சியை விட அதிகமாக இருப்பது போல் உணர்வீர்கள். ஒரு விசயத்திற்கு முடிவு எடுப்பதற்கும் உங்களுக்கு விரைவாக உதவி செய்யும். அதாவது உங்களால் சில நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். அந்த சமயத்தில் விரைவாக முடி எடுப்பீர்கள், நிதானமாகவும் இருப்பீர்கள்.

கால்கள் வலிமை பெற:

கால்கள் வலிமை பெற

நாம் முன்னோக்கி நடக்கும் போது புறத்தில் இருக்கும் தசைகள் எதுவும் அதில் ஈடுபடாது. மேலும் அது அந்தளவிற்கு இயங்காது. ஆனால் நாம் பின்னோக்கி நடக்கும் போது கால்கள், நரம்புகள், தசைகள் அனைத்துமே வலுமை பெரும். அதேபோல் கவனத்தை அதிகப்படுத்தும், வேறு எந்த ஒரு யோசனைக்கு செல்ல மனது இடம் கொடுக்காது. இதன் மூலம் கால்கள் வலிமை பெரும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உடல் சோர்வு நீங்க, சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..! 

முழங்கால் வலி குணமாக:

முழங்கால் வலி குணமாக

சிலருக்கு முழங்கால் வலி இருக்கும். அவர்களுக்கு முன்னோக்கி நடக்கும் போது அவர்களுக்கு முழங்கால் வலி அதிகமாகும். இருந்தாலும் வாக்கிங் செல்ல வேண்டும் என்பதால் செல்வார்கள். ஆனால் இவர்கள் பின்னோக்கி நடந்தால் முழங்கால் வலி அதிகம் இருக்காது. அதேபோல் யாருக்கும் கால் வலி ஏற்படாது.

மன அழுத்தம் குறைய:

மன அழுத்தம் குறைய

Journal of Physical Therapy Science -ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி மனதில் மனநிலையை உருவாக்குகிறது. மேலும் எந்த சூழ்நிலையிலும் சமநிலையாக இருக்கவும் தடுமாறாமல் முடிவெடுக்கவும் உதவி புரிகிறது. மேலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நல்ல ஹார்மோன்களை வெளிப்படுத்தவும் முடிகிறது.

பின் முதுகு வலி:

 benefits of walking for weight loss in tamil

அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக முதுகுவலி ஏற்படும். அவர்களை பின்னோக்கி நடக்க பரிந்துரைக்கிறார்கள். மேலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் விரைவில் உடல் எடையை குறைக்க நினைத்தால் பின்நோக்கி நடப்பது நல்லது. மேலும் அனைத்து தசைகளும் இயங்கவும் வழி செய்து உடல் எடை விரைவில் குறையும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்களுக்கு தெரியுமா நடைப்பயிற்சி எவ்வளோ நன்மை என்று!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement