இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

முடக்கு வாதம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

ஹலோ நண்பர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் முடக்கு வாதம் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இன்றைய காலகட்டத்தில் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை மறந்து விடுகிறோம். கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானதாக இருந்தாலும் அதை அதிகம் எடுத்து கொண்டால் அதனால் நமது உடலுக்கு சில உபாதைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் நாம் சாப்பிடும் சில உணவுகளால் முடக்கு வாதம் பிரச்சனை ஏற்படுகிறது. அப்படி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகள் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.

இதையும் பாருங்கள் 👉 சொரியாசிஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முடக்கு வாதம் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்:

நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் தான் முடக்கு வாதம் பாதிப்பு ஏற்படுகிறது. யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க  கூடிய உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த யூரிக் அமிலம் மூட்டு பகுதியில் உள்ள திரவத்தோடு கலப்பதால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுபோல சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மட்டி மீன்:

மட்டி மீனில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதால் இந்த மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மீன் சாப்பிடுவதால் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க கூடும். இதனால் உங்களுக்கு முடக்குவாத நோய்கள் ஏற்படும். அதனால் இந்த மீன் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பயிர் வகைகள்:

கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளில் யூரிக் அமிலத்தை தூண்ட கூடிய பண்புகள் அதிகம் இருப்பதால் இதுபோன்ற பயிர் வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சில வகையான காய்கறிகள்:

நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் கூட யூரிக் அமிலம் இருப்பதால் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டைகோஸ், காளான் மற்றும் காலிப்ளவர், கீரை மற்றும் முள்ளங்கி போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement