ருத்ர முத்திரை பயன்கள் | Rudra Mudra in Tamil
rudra mudra benefits in tamil: யோகா செய்வதால் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். வயதாகிவிட்டாலே அனைவருக்கும் பல நோய்கள் வந்துவிடும். குறிப்பாக கை, கால் வலி, மூட்டுகளில் வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வருவது இயல்புதான். யோகாவில் பல வகையான யோகா வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பதிவில் ருத்ர முத்திரை செய்வதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
ருத்ர முத்திரை செய்முறை:
ருத்ர முத்திரை பலன்கள்: யோக முத்திரையில் அதிக சக்தி வாய்ந்த யோகாசனம் ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு இந்த முத்திரை செய்வதால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.
- முதலில் ருத்ர முத்திரை செய்வதற்கு கீழே ஒரு விரிப்பை போட்டு கிழக்கு திசையை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்துக்கொள்ளவும். முதுகெலும்பை வளைக்காமல் நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
- அடுத்து கண்களை ஒரு நிமிடம் மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். மூச்சை வெளியிடும் போது நமது உடல், மனதில் இருக்கக்கூடிய அழுத்தம், டென்ஷன் உடலைவிட்டு வெளியேறும்.
- இப்போது கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரலும், சுண்டுவிரலும் நீட்டியபடி இருத்தல் வேண்டும்.
- நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
ருத்ர முத்திரை பலன்கள்:
- சிலர் எப்போதும் உடலில் சோர்வுடனே காணப்படுவார்கள். இந்த ருத்ர முத்திரை யோகாவை செய்வதால் உடல் சோர்வு, களைப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- பார்வைத்திறன் குறைபாடு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். பார்வை திறன் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்த பிரச்சனை, சுவாச பிரச்சனைகளை சீராக வைத்திருக்கும்.
- அதிக மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை செய்து வந்தால் முற்றிலும் வலி குறைந்துவிடும்.
- ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.
- வயதாகிவிட்டாலே பலருக்கு நினைவாற்றல் திறன் குறைந்துவிடும். நினைவாற்றல் அதிகரிக்க, நடுக்குவாதம், அல்சைமர் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முத்திரையை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- உடல் வலிமை குன்றி போனவர்களுக்கு உடல் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதயம் சம்பந்தமான பிரச்சனை வராமல் பாதுகாத்துக்கொள்ளும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |