உடல் எடை குறைய யோகாசனம்..! Weight Loss Yoga in Tamil..!

உடல் எடை குறைய யோகா பயிற்சி..! Yoga Asanas For Weight Loss..!

Yoga Poses For Weight Loss/ உடல் எடை குறைய யோகா: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் உடல் எடையினை குறைக்க என்னென்ன யோகாசனம் இருக்கிறது என்பதை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம். உடல் எடையினை குறைப்பதற்கு டயட் என்ற பெயரில் உணவினை சரியாக எடுத்துக்கொள்ளாமல் நம்  உடலை நாமே வீணடித்து கொள்கிறோம். உடல் எடையை குறைப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறையானது சரியாக இருக்க வேண்டும். மேலும் போதியளவு தூக்கம், உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க சிறிய சிறிய யோகாசனம் செய்தாலே போதும். உடலானது நம்முடைய கட்டுபாடுக்குள் வந்துவிடும். சரி வாங்க இப்போது உடல் எடையினை குறைப்பதற்கு என்னென்ன மாதிரியான யோகாசனங்கள் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

newயோகா வகைகள் மற்றும் பயன்கள்..!

மலாசனா யோகாசனம்:

 • malasana yoga
 • முதலில் விரிப்பின் மீது கால்களை இடைவெளி விட்டு நிற்கவும். அதன்பிறகு உங்களுடைய கால் பகுதியை தோள் பட்டை அளவிற்கு விரித்துவைத்து கொள்ளவும்.
 • மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி பொறுமையாக உட்கார வேண்டும். அடுத்ததாக குத்துகாலிட்டு அமரவேண்டும்.
 • அமர்ந்த பிறகு இரண்டு கால் மூட்டுகளுக்கு நடுவில் கைகளை வணக்கம் சொல்வது போல் வைக்கவும். இப்போது ஆழ்ந்த நிலைக்கு சுவாசத்தினை மேற்கொள்ளவும்.
 • இந்த நிலை மாறாமல் 30 முதல் 60 நொடி வரை அப்படியே இருக்கவும். பிறகு உடலை ரிலாக்ஸ் செய்து மீண்டும் செய்யவும்.
 • இந்த மலாசனா யோகாசனம் செய்து வந்தால் தொடை பகுதிக்கு அழுத்தம் கிடைக்கும். மேலும் இந்த ஆசனத்தை தொடர்ச்சியாக செய்தால் தொடையில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்துவிடும்.
 • எலும்பு சார்ந்த எந்த வித பிரச்சனைகளும் வராமல் இடுப்பு மற்றும் எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும். இந்த ஆசனத்தினை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால் உடல் எடையானது குறையும்.

எடையை குறைக்கும் ஜக்கிசலாசனா யோகா:

chakki chalanasana benefits

 • ஜக்கிசலாசனா யோகாசனம் செய்வதற்கு இரண்டு கால்களையும் நீட்டி அகலமாக விரித்து அமரவும். அதன் பின் இரண்டு கைகளையும் நீட்டி விரல்களை ஒன்றுக்கு ஒன்று இணைக்க வேண்டும்.
 • அடுத்து வலது பகுதியிலிருந்து இடது பகுதிக்கு கைகளை சுழற்ற வேண்டும். முழங்கால் முட்டி பகுதி உயர்ந்த நிலையில் இருக்கக்கூடாது.
 • முன்செல்லும்பேது மூச்சை இழுத்தும், பின்வரும்போது மூச்சை விடவும் வேண்டும்.
 • வலது பகுதியிலிருந்து இடது புறமாக 10 முறை இடைவெளியுடன் அசைக்க வேண்டும். இப்போது உடலை தளர்த்தி (relax) கொள்ளலாம்
 • இந்த ஜக்கிசலாசனா யோகாசனம் அடிவயிற்று பகுதியில் தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும். ஜக்கிசலாசனா யோகா செய்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் இருந்தால் அந்த பிரச்சனையை இந்த ஜக்கிசலாசனா ஆசனம் சரிசெய்யும்.
 • மேலும் இந்த ஆசனத்தின் நன்மை வயிற்று பகுதிகளில் உள்ள தசை மற்றும் தொடை பகுதிகளை வலிமையாக வைத்திருக்கும். குறிப்பாக செரிமான பிரச்சனைகளிலிருந்தும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

உடல் எடையை குறைக்கும் ஆனந்த பலாசனா ஆசனம்:

 • ananda balasana benefitsஉடல் எடை குறைவதற்கு படத்தில் காட்டியப்படி மல்லாந்த நிலையில் படுத்தப்படி இரண்டு கால்களையும் நேராக நீட்டியபடி கைகள் இரண்டையும் கீழே வைத்துக்கொள்ளவும்.
 • அதன் பிறகு இரண்டு கால்களையும் செங்குத்தாக நிற்க வைப்பது போல் வைக்கவும். வலது கை வலது பாதத்தினையும், இடது கை இடது பாதத்தினையும் தொட்டு பிடித்தவாறு இருக்க வேண்டும்.
 • கால் பாதங்கள் மேல் பகுதியை பார்த்த வண்ணம் இருக்கவேண்டும். கை, கால் பாதத்தினை பிடித்தபடி இருக்கவும்.
 • இந்த நிலையிலே 10 முதல் 20 வினாடி வரை இருந்து அதன் பிறகு காலை கீழே இறக்கி மூச்சை விட்டு சில விநாடிகள் உடலை ரிலாக்ஸ் செய்யவும்.
 • ரிலாக்ஸ் செய்த பிறகு மீண்டும் இதனை செய்யவும். இந்த ஆசனத்தினை தினமும் 3 முதல் 5 முறை வரை செய்ய உடல் எடையானது குறையும்.
new1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!

உடல் எடையை குறைக்கும் சவாசனா யோகாசனம்:

 • savasana benefits உடல் எடை அதிகமாக இருக்க கூடியவர்கள் எளிமையாக செய்யக்கூடிய ஆசனம் தான் இந்த சவாசனா. இந்த ஆசனம் உடல் எடை அதிகம் இருப்பதினால் ஏற்படும் மன அழுத்தத்தினை குறைக்கும்.
 • உடல் முழுவதையும் தளர்த்தி செய்யும் இந்த ஆசனத்தினால் உடல் எடையானது குறைந்து காணப்படும். மேலும் இந்த ஆசனத்தினால் மனதிற்கு நேர்மறை சிந்தனைகள் கிடைக்கும்.

உடல் எடை குறைய தனுராசனா யோகாசனம்: 

dhanurasana yoga

 • தனுராசனா யோகாசனம் செய்வதற்கு முதலில் இரண்டு கால்களையும் நீட்டியபடி மேல்வாய் தரையில் படும் அளவிற்கு படுக்கவும்.
 • பிறகு மெதுவாக கால்களை மடக்கி மேலே உயர்த்தவும். அதே நிலையில் கைகளை தூக்கி கணுக்காலை பிடிக்கவும்.
 • அடுத்து தரைமட்டத்தில் இருந்து நெஞ்சு பகுதியை மேலே உயர்த்தவும்.
 • 20 நிமிடம் வரை ஆழ்ந்த சுவாசத்தில் இருக்கவும். இப்போது உடலின் எடை முழுவதும் அடிவைற்று பகுதியில் இருக்க வேண்டும்.
 • மூச்சினை இழுத்த படி பழைய நிலைக்கு மீண்டும் வரவும். இந்த ஆசனத்தினை தினமும் 08 முதல் 10 முறை செய்து வர உடல் எடை குறைந்து காணப்படும்.
 • அதிக உடல் எடையினை குறைக்கும் தனுராசனா ஆசனம் தொப்பையினை வெகு விரைவில் குறைக்கும். உடலில் கணுக்கால், தொடை, இடுப்பு, மார்பு, முதுகுப் பகுதிகளில் உள்ள தசையினை வலிமையாக வைத்திருக்கும்.
 • அஜீரண கோளாறு, இரப்பை மற்றும் குடல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். மேலும் உடலில் இரத்த ஓட்டம், கல்லீரல், கணையம் பகுதிகளை மேம்படுத்தச்செய்கிறது. மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தினை செய்யலாம்.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு (weight loss yoga in tamil) பல யோகாசனங்கள் உள்ளன. அவற்றின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்