உணவில் அதிகம் புளி சேர்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா..?

side effects tamarind in tamil

புளி அதிகம் சாப்பிட்டால்

நாம் சமையலில் புளி சேர்க்காமல் சமைப்பதில்லை. சைவ உணவுகளில் புளிஅதிகம்  சேர்ப்பார்கள் அப்போது தான் ருசியாக இருக்கும்.  சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு, சட்னி போன்றவற்றில் புளி சேர்த்து தான் ஆக வேண்டும். அப்போது தான் அந்த சமையல் நிறைவடையும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல புளியை அதிகம் உணவில் சேர்த்தால் நம் உடல் நிலையை பாதிக்கும். நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

ரத்தம் உறைதல்: 

புளியை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் ரத்த உறைதலை ஏற்படுத்தும். அதோடு இல்லமால் ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இதனால் தான் நாட்டு மருந்து சாப்பிடுபவர்கள் உணவில் புளி அதிகம் சேர்க்க கூடாது என்று சொல்வார்கள்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்:

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்

புளி சேர்த்த உணவுகள் அதிகமாக எடுக்கும் போது ஒவ்வாமையை உண்டாக்கும். சருமம் சிவந்திருப்பது, வீக்கம் , தலைவலி, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்சனையை உடலில் ஏற்படுத்தும்.

பல் பிரச்சனை:

பல் பிரச்சனை

புளியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் புளியை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது பற்களில் பிரச்சனை ஏற்படுத்தும். சில நபர்களுக்கு நாக்கில் அரிப்பை ஏற்படுத்தும். புளியை உணவில் சேர்ப்பதை குறைக்க வேண்டும்.

பித்தப்பை கல்:

பித்தப்பை கல்

உணவில் அதிகம் புளி சேர்த்து சாப்பிடுவதால் பித்தப்பையில் கற்கள் உருவாகும் என்று இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, செரிமானக்கோளாறு போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.

செரிமான கோளாறு:

செரிமான கோளாறு

உணவில் புளி அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாது. நாளடைவில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். உணவிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் நமக்கு கிடைக்காது. அமில தன்மை அதிகமாக இருப்பதால் வயிற்று வலி பிரச்சனையும் ஏற்படும்.

மலச்சிக்கல் பிரச்சனை:

மலச்சிக்கல் பிரச்சனை

புளியின் அமில தன்மை அதிகமாக நம் உடம்பில் சேரும் போது உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறாது. இதனால் வயிறு உப்புசம். மலசிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும்.

மூச்சு விடுவதில் சிரமம்:

மூச்சு விடுவதில் சிரமம்

சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிகம் புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. புளி நுரையீரலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் மூச்சு விடுவதில் கஷ்டப்படுவீர்கள். அதனால் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் புளியை உணவில் சேர்த்து கொள்ளதீர்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்