திரிகடுகம் பயன்கள் | Thirikadugam Uses in Tamil

Thirikadugam Uses in Tamil

திரிகடுகம் மருத்துவ பயன்கள் | Thirikadugam Health Benefits in Tamil

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகள் உடலுக்கு சக்தி தருவதற்கு மட்டும் இன்றி உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கும், நோய் வராமல் இருப்பதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கு உதவி வருகிறது. அப்படி உடலில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்துவதில் முதன்மையானது திரிகடுகம். நாம் இந்த பதிவில் திரிகடுகம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திரிகடுகு சூரணம் பயன்கள்- Thirikadugam Chooranam

சுக்கு, திப்பிலி, மிளகு மூன்றும் சேர்ந்த கலவை தான் திரிகடுகம். உலர்ந்த இஞ்சியை தான் நாம் சுக்கு என்கிறோம்.

திரிகடுகம் செய்முறை:

திரிகடுகம்

 • உலர்ந்த இஞ்சியின் தோலை நீக்கி விட்டு ஒரு கடாயில் போட்டு வருத்து கொள்ளவும், அதே போன்று திப்பிலி மற்றும் மிளகை வறுத்துக்கொள்ளவும்.
 • சூடு ஆரிய பிறகு சுக்கு, திப்பிலி, மிளகு மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்பொழுது திரிகடுகம் சூரணம் தயாராகிவிடும்.
 • நாட்டு மருந்து கடைகளிலும் இந்த திரிகடுகம் கிடைக்கும்.

திரிகடுகம் பயன்கள் – Thirikadugam Benefits in Tamil:

Thirikadugam Benefits in Tamil

 • செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு திரிகடுகம் அதிக அளவில் பயன்படுகிறது. இருமல், சளி, நெஞ்சு சளி, தும்மல், தலைவலி போன்ற சளி சம்மந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கு இந்த திரிகடுகம் உதவுகிறது.

தொண்டை புண்களை சரி செய்வதற்கு:

திரிகடுகம் பயன்கள்

 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ஆண்மையை அதிகரிப்பதற்கும், காது, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பெரிதும் உதவுகிறது.
 • தொண்டையில் ஏற்படும் புண் மற்றும் வீக்கத்தை சரி செய்வதற்கும், பனிக்காலத்தில் ஏற்படும் தொண்டைக்கட்டுதலை சரி செய்யவும் உதவுகிறது.

காய்ச்சலை குணப்படுத்த – Thirikadugam Uses in Tamil

திரிகடுகு சூரணம் பயன்கள்

 • திரிகடுகத்தை தேனுடன் கலந்து கொடுப்பதால் காய்ச்சல் சரியாகும், பசியின்மையை போக்கி பசியை தூண்டும், தோல் நோய்களை சரி செய்யவும் பயன்பட்டு வருகிறது.

தலை வலியை சரி செய்ய – திரிகடுகம் பயன்கள்:

Thirikadugam Health Benefits in Tamil

 • நுரையீரல், கபம், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், தைராய்டு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தவும் திரிகடுகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
 • தலைவலி, வயிற்று வலி போன்ற வலி நீக்கி மருந்தாகவும் திரிகடுகம் செயல்பட்டு வருகிறது.

நரம்பு பிரச்சனைகளை சரி செய்ய – திரிகடுகு சூரணம் பயன்கள்:

Thirikadugam Health Benefits in Tamil

 • நரம்பு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் திரிகடுகு சூரணம் 1 கிராம் எடுத்து அதனை வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு வேலை குடித்தால் சரியாகும். மேலும் இதய நோய்களை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
 • சிறுகுறிஞ்சான்வேர் சூரணம் 1 கிராம் மற்றும் திரிகடுகு சூரணம் 1 கிராம் இரண்டையும் சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்தால் மூச்சு திணறல் சரியாகும்.

 Thirikadugam Uses in Tamil – வாதம் குணமாக:

 Thirikadugam Uses in Tamil

வாதம் மற்றும் காய்ச்சல் குணமாக சித்தாமுட்டி வேர் சூரணம் 10 கிராம் எடுத்து அதனை 100 கிராம் தண்ணீரில் 25 மில்லி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுடன் திரிகடுகு சூரணம் 1 கிராம் சேர்த்து 3 நாட்கள் காலை, மாலை என இரண்டு வேலை குடித்தால் விரைவில் வாதம் மற்றும் காய்ச்சல் குணமாகும்.

திரிகடுகம் சாப்பிடும் முறை:

 • பெரியவர்கள் திரிகடுகம் 1 கிராம் அளவு எடுத்து அதை தேனில் கலந்து காலை, மாலை என இரண்டு வேலை குடிக்கலாம்.
 • குழந்தைகளுக்கு திரிகடுகம் 1/2 கிராம் அளவு எடுத்து அதை தேனில் கலந்து கொடுக்கலாம்.
திப்பிலி மருத்துவ குணங்கள்
ஆடாதொடை இலையின் மருத்துவ குணம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil