தொண்டை அடைப்பு குணமாக | Thondai Adaippu Kunamaga Tips in Tamil
தொண்டை அடைப்புக்கு என்ன செய்வது/ Thondai Adaippu Tips in Tamil: தொண்டை சம்பந்த பிரச்சனை வெயில் காலத்திலும் சரி, கோடை காலத்திலும் சரி விடாது நோய் போன்று தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். தொண்டை வலி பிரச்சனை இருக்கும்போது உணவு சாப்பிட முடியாது, நீர் அருந்த முடியாது, எரிச்சலால் மிகவும் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் தொண்டை சம்பந்த பிரச்சனையை வளரும் குழந்தைகள் தான் அனுபவித்து வருகிறார்கள். தொண்டை அடைப்பு பிரச்சனையை ஆரம்ப காலத்திலே நாம் சரி செய்துவிட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. சரி தொண்டை அடைப்பு நீங்க (thondai adaippu tips in tamil) அருமையான டிப்ஸ் சிலவற்றை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்..!
தொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம் |
தொண்டை அடைப்பு குணமாக | Thondai Adaippu Tips in Tamil:
உப்பு நீரால் வாய் கொப்பளிக்கவும்:
தொண்டை அடைப்புக்கு என்ன செய்வது: ஆன்டி பாக்டீரியல் தன்மை உப்பில் அதிகளவு உள்ளன. உப்புவை 1/4 டீ ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை தொண்டையில் படும் அளவிற்கு நன்றாக கொப்பளிக்கவும். இது தொண்டை பகுதியில் வலியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்றி தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்திகிறது. மேலும் தொண்டையில் தொற்றுகள் குறைந்து தொண்டை சளியும் நீங்கி தொண்டை அடைப்பு பிரச்சனையும் சரி செய்து விடுகிறது.
தொண்டை அடைப்புக்கு மஞ்சள் கலந்த பால்:
தொண்டை அடைப்புக்கு காரணம்: பல மருத்துவ குணம் நிறைந்துள்ள மஞ்சள் சமையல் கலைகளில் முதல் முதலாக இடம் பெற்றுள்ளது. மேலும் மஞ்சள் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. தொண்டை அடைப்பு, தொண்டை எரிச்சல், தொண்டை வலி போன்றவற்றிற்கு மருத்துவ குணம் நிறைந்துள்ள மஞ்சளை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாட்டு வைத்தியம்..! |
இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை கலந்த சாறு:
தொண்டை சம்பந்த பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடியது இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவை. இஞ்சியை மேலே உள்ள தோல் பகுதியை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு டம்ளர் அளவு நீரில் போட்டு ஒரு டம்ளர் அளவிற்கு நீராக வரும் அளவிற்கு கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 1 அல்லது 2 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.
தேனில் இருக்கும் அதிக ஆன்டிபயாடிக் இயற்கையான ஹைபர்டோனிக் ஆஸ்மோடிக் தன்மை அழற்சி ஏற்பட்டுள்ள திசுக்களில் உள்ள சளியை சவ்வூடு பரவல் மூலம் அடர்த்தியான சளியையும் வெளியேற்றி விடும். மேலும் தொண்டை புண், அடைப்பு போன்றவற்றை படிப்படியாக குறைத்துவிடும்.
தொண்டை அடைப்பு நீங்க பூண்டு:
தொண்டை அடைப்பு நீங்க: தொண்டை அடைப்பு பிரச்சனை, தொண்டை வலியை தாங்க முடியாதவர்கள் பூண்டு பல் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். பூண்டில் அல்சின் என்ற வேதி பொருள் அதிகமாக உள்ளது. இது உங்கள் தொண்டை அழற்சிக்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது. பூண்டினுடைய வாடை பிடிக்காது என்றாலும் பூண்டுச் சாறு தொண்டையில் படும் போது இதமாக இருக்கும். முடியாதவர்கள் சுடு கஞ்சி வைத்து அதில் பூண்டு பற்களை நசுக்கி சேர்த்தும் குடிக்கலாம். தொண்டை அடைப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தொண்டை அடைப்புக்கு பட்டை:
தொண்டை அடைப்புக்கு என்ன செய்வது: நறுமணம் அதிகம் உள்ள பொருளான பட்டையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகமாக உள்ளது. தொண்டை அடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் டீ அல்லது பாலிலோ பட்டையை சேர்த்து குடித்து வர தொண்டை சம்பந்த பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் தொண்டை அடைப்பு பிரச்சனைக்கு பாதாம் பாலில் நன்கு இடித்து வைத்துள்ள பட்டையின் பொடி, தேன் சேர்த்து மிதமான அளவிற்கு சூடு வரும் வரை தயார் செய்த பிறகு தொண்டை பகுதியில் படும்படி பாதாம் பாலை குடித்து வர தொண்டை புண் விரைவில் குணமாகும்.
தொண்டை அடைப்பை குணமாக்கும் சிக்கன் சூப்:
Thondai Adaippu in Tamil: நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால் மிளகுத்தூள் கலந்த சிக்கன் சூப்பை தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை சம்பந்த பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கலாம். சளி பிடித்த நேரத்தில் நமது உடலுக்கு போதுமான நீர்சத்து மிகவும் அவசியம். அந்த நேரத்தில் காய்கறியால் செய்த சூப் வகைகள், சிக்கன் சூப் போன்றவற்றை குடித்து வந்தால் தொண்டை புண், தொண்டை அடைப்பு, தொண்டையில் உள்ள சளி நீங்கிவிடும்.
தொண்டை அடைப்புக்கு மிளகுக்கீரை டீ:
தொண்டை அடைப்புக்கு என்ன செய்வது: மிளகுக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை தொண்டை பகுதியில் ஏற்படக்கூடிய நோய் கிருமி தொற்றை எதிர்த்து போராடுகிறது. தொண்டை அடைப்பு நீங்க மிளகுக்கீரையுடன் புதினாவையும் சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து இஞ்சியின் சாறுவையும், அதனுடன் தேன் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தொண்டை அடைப்பு நீங்க – மிருதுவான பான வகை:
தொண்டை அடைப்பு நீங்க: தொண்டை அடைப்பு பிரச்சனை உள்ளவர்கள், தொண்டை வலி தொண்டையில் புண் போன்ற பல தொண்டை சம்பந்த பிரச்சனைக்கு பட்டை டீ, இஞ்சி துளசி டீ, லெமன் தேன் டீ, மசாலா டீ போன்ற மூலிகை கலந்த பானங்களை குடித்து வர தொண்டை பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |