தூதுவளை மருத்துவ பயன்கள் | Thoothuvalai Benefits in Tamil

Thoothuvalai Benefits in Tamil

தூதுவளையின் மருத்துவ பயன்கள்..!

Thoothuvalai Benefits in Tamil – நமது நாட்டில் ஏராளமான மூலிகை செடிகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் தூதுவளை மருத்துவ பயன்களை பற்றி நாம் விரிவாக படித்தறியலாமா? தூதுவளை பொதுவாக வேலி ஓரளங்களில் தானாகவே வளரக்கூடிய ஒரு மூலிகை தாவரமாகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் சித்த மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஏராளமான சத்துக்கள் இந்த தூதுவளை இலையில் நிறைந்துள்ளது. ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தூதுவளை சிறந்த மூலிகை செடியாகும். சரி இப்பொழுது தூதுவளை மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Thoothuvalai Benefits in Tamil:-

சளி இருமல் தொல்லை நீங்க தூதுவளை கஷாயம் :

தேவையான பொருட்கள்:

  1. தூதுவளை இலை – சிறிதளவு
  2. சீரகம் – ஒரு சிட்டிகை
  3. மிளகு (நுனிக்கியது) – ஒரு சிட்டிகை
  4. சுக்கு பொடி – 1/2 ஸ்பூன்
  5. லவங்க பட்டை அல்லது லவங்க பொடி – 1/2 ஸ்பூன்
  6. பனை வெல்லம் – தேவையான அளவு
  7. ஓமவல்லி இலை – சிறிதளவு
  8. துளசி – சிறிதளவு
  9. தண்ணீர் – 2 கிளாஸ்

தூதுவளை கஷாயம் எப்படி செய்வது?

செய்முறை: 

ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு & மூன்று கிளாஸ் நீர் மற்றும் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 to 5 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் கஷாயத்தை வடிகட்டி மிதமான சூட்டில் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளை அருந்திவர சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். 15 வயது குழந்தை முதல் அனைத்து வயதினரும் இந்த கஷாயத்தை அருந்தி வரலாம் நல்ல பலன் கிடைக்கும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள்..!

உடல் வலிமை பெற:

தூதுவளை இலையை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து காலை மாலை ஆகிய இருவேளை ஒரு ஸ்பூன் அளவு பொடியை தேனில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒருமண்டலம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும். அதேபோல் தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து அருந்தி வந்தாலும் உடல் வலிமை பெரும்.

மார்புச்சளி குறைய:

மார்புச்சளியால் தினமும் அவஸ்த்தை படுபவர்கள் தூதுவளை பழத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி முற்றிலும் குணமாகும்.

எலும்புகள் பலம் பெற:

தூதுவளை இலையில் கால்சியம் சத்து அதிகளவு நிரைத்துள்ளது ஆகவே. தூதுவளை கீரையில் செய்ய கூடிய உணவுகளை தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறையாவது எடுத்து கொள்வதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகள் வலிமை பெரும்.

கபம் குணமாக:

மனித உடலில் உள்ள ஈரபதத்தின் அளவே கபம் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு வகையான நீர் கோர்வை என்றும் கூறலாம். குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உடலில் கபம் அளவு அதிகரிக்கிறது. கபம் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் தூதுவளை கீரையில் அடை செய்து சாப்பிடுவதன் மூலம் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips