தொப்பை இருந்த இடம் தெரியாமல் குறைய ஒரே ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

தொப்பை குறைக்க என்ன செய்வது

இன்று பல நபர்களிடம்  உள்ள ஒரு கேள்வி என்றால் தொப்பை குறைய என்ன செய்வது என்பது தான். இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் இப்போது பெண்களுக்கும் வர ஆரம்பம் ஆகி உள்ளது. ஆனால் பெண்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஆண்களுக்கு தான் இந்த பிரச்னை அதிகமாகஉள்ளது. வயது மிகவும் குறைவாக இருக்கும் ஆனால் தொப்பையை பார்த்தால் அதற்கு எதிர்மாறாக இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறைய நபர்கள் டயட் போன்றவற்றை கடைபிடிக்கிறார்கள். ஆனால் அவை முழுவதுமான பலன்களையும் அளிக்கவில்லை. இனி நீங்கள் தொப்பையை என்ன தான் செய்து குறைப்பது என்று கவலைப்பட வேண்டாம். இன்றைய பதிவில் மிகவும் எளிய முறையில் தொப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ உடல் எடை குறைய இனி எதுவும் செய்ய வேண்டாம்..! இதை மட்டும் குடித்தால் போதும்..!

தொப்பை வர காரணம்:

தினமும் நாம் சாப்பிடும் உணவில் அதிக கலோரிகள் கொண்ட உணவினை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் உடலில் ஹார்மோன்களின் வளர்ச்சி இவை இரண்டின் காரணமாக உடல் எடை அதிகரிக்க செய்கிறது. உடல் எடை அதிகரிக்கும் போது நமக்கு தொப்பை வரும்.

அதுபோல பாஸ்ட் புட் மற்றும் சரியான தூக்கமின்மை இதுபோன்ற காரணங்களும் தொப்பை வருவதற்கான ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. 

How to Reduce Belly:

தொப்பையை குறைக்க நீங்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். ஆனால் இதுபோன்றவற்றை இல்லாமல் 3 விதமான குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் தொப்பை குறைந்து விடும். அது எப்படி என்று விரிவாகி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சப்ஜா விதை:

தொப்பையை குறைக்க என்ன செய்வது

தொப்பையை மிக வேகமாக குறைய வைப்பதற்கு நாம் சப்ஜா விதையினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் சப்ஜா விதையினை சிறிதளவு கலந்து வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் விரைவில் தொப்பை மற்றும் உடல் எடை குறைந்து விடும். 

இத்தகைய சப்ஜா விதை உடல் வெப்பத்தையும் மற்றும் உடலை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறது. 

எலுமிச்சை பழம்:

thoppai kuraiya juice in tamil

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழிந்து வைத்துக்கொண்டு அதனை 1 டம்ளர் மிதமான சுடு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

 இவ்வாறு குடிப்பதன் மூலம் நமது உடலில் நீர் சத்துக்கள் குறையாமலும் மற்றும் தேவையில்லாத நச்சுக்களையும் வெளியேற்றவும் பயன்படுகிறது. அதுபோல இந்த சாறு நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட செய்து உடலை எடை மற்றும் தொப்பை இரண்டையும் குறைக்கிறது.  
ஆண்களே தொப்பை குறைய எளிய வழிகள்..!

மசாலா மோர்:

thoppai kuraiya enna seiya vendum tamil

மசாலா மோரில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் இது உடலில் தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கவும் மற்றும் உடல் உஷ்ணத்தை குறையவும் செய்கிறது.

மேலும் இந்த மசாலா மோரில் உள்ள சீரகம், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை இருப்பதால் இதனை நாம் தினமும் குடிப்பதன் மூலம் உடலில் மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைய தொடங்குகிறது. 

இதையும் படியுங்கள்⇒ கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் சுத்தம் செய்ய இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement