துவர்ப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா.!

Advertisement

துவர்ப்பு உணவுகள் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் துவர்ப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். அறுசுவை உணவுகளில் துவர்ப்பும் ஒருவகையான சுவைதான். ஆனால் அதில் ஒரு சிலர் துவர்ப்பு உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால்  சிலர் அதிகமாக விரும்ப மாட்டார்கள், அந்தவகையில் உணவுகளில் துவர்ப்பு கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்னவென்று தெரியுமா?

துவர்ப்பு சுவையின் நன்மைகள்:

துவர்ப்பு சுவையை அதிகமாக சேர்க்காமல் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம்,  கருப்பை நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமே துவர்ப்பு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது தான். துவர்ப்பு சுவைகள் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்து கொள்வதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் இவற்றின் நன்மைகளை பார்க்கலாம்.

இரத்தம்:

blood circulation in tamil

உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு துவர்ப்பு சுவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை நீங்குவதற்கும், இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீங்கி, இரத்தத்தை அதிகரிக்க செய்கிறது. அதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கிறது.

இதயம்:

heart blood circulation in tamil

துவர்ப்பு சேர்ந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயத்தில் உள்ள கெட்ட  கொழுப்புகளை அகற்றி இதய அடைப்பு வராமல் தடுக்கவும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்தில் உள்ள இரத்த குழாய்களை ஆரோக்கியமாக  வைப்பதற்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும் துவர்ப்பு சுவை மிகவும் முக்கியமாக இருக்கிறது.

கருப்பை:

uterus healthy foods in tamil

 

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பை நோய், இந்த கருப்பை நோய்கள் பிரச்சனைகளில் இருந்து தடுப்பதற்கு துவர்ப்பு மிகவும் முக்கியபங்கு  வகிக்கிறது. அதாவது துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை சாப்பிடுவதால் கருப்பை பிரச்சனைகள், கருப்பையில் ஏற்படும் கட்டிகள், மலட்டு தன்மை, கருச்சிதைவு, மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சிறுநீரகம்:

siruneeraga problem in tamil

சிறுநீரக செயல்பட்டிற்கு துவர்ப்பு சுவை மிகவும் முக்கியமாக இருக்கிறது. சிறுநீரகம் நன்றாக வேலை செய்வதற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் துவர்ப்பு சுவை உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

கல்லீரல்:

liver health food tamil

கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும்,  அதில் உள்ள நச்சுகள் நீங்கவும், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும் திறமையையும், உடலில் உள்ள பித்தைதை குறைக்கும் திறமையும் துவர்ப்பு சுவைக்கு அதிகமாக உள்ளது.

சர்க்கரை நோய்:

sakkarai noi kunamaga

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் துவர்ப்பு சுவைகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும், இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் இந்த துவர்ப்பு உணவுகள்  முக்கிய பங்கு பெற்றுள்ளது.

நரம்புகள்:

narambugal valimai pera

நம் உடலில் இருக்க கூடிய நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பலமாக இருப்பதற்கும் நரம்புகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு துவர்ப்பு சேர்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்க்கிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

 

Advertisement