ஜிலேபி மீன் நன்மைகள் | Tilapia Fish Benifits in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஜிலேபி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதோடு ஜிலோபி மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்றும் பார்க்கலாம். ஜிலேபி மீன் ஒரு பிரபலமான மீன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ருசியான மீன் பல வீடுகளில் சமைத்து சாப்பிடப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் இந்த ஜிலேபி மீன் அந்த அளவுக்கு ஆரோக்கியத்தை கொண்டுள்ளது. சமையலில் சுவை தருவதற்கும், பல உணவுகளை தயாரிக்கவும் ஜிலேபி மீன் பயன்படுகிறது. மேலும் ஜிலேபி நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
சால்மன் மீன் நன்மைகள் |
ஜிலேபி மீன்களின் ஊட்டச்சத்துக்கள்:
ஜிலேபி மீன்களை உணவில் சேர்ப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். இந்த மீன் உடலுக்கு தேவையான B12 மற்றும் நாசியின் வைட்டமின் B6 மற்றும் டைதயோனிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இந்த மீன் இதயத்திற்கும் நன்மைகள் தருகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் ஒமேகா 3 அமிலம் இருப்பதால் மூளைக்கும் நன்மை தருகிறது.
மேலும் நரம்புகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த மீன் சேர்த்து கொள்ளவதால் நன்மை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மீன் உணவில் சேர்ப்பதால் ஞாபக மறதி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் 340 கிராம் மட்டும் இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜிலேபி மீன்களின் ஆரோக்கிய நன்மைகள்:
ஜிலேபி மீனில் செலினியம் சத்துக்கள் இருப்பதால் சுவாசிப்பதற்கு நன்மை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களை குறைக்கிறது.
உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்துகிறது.
தைராய்டு சுரப்பிகள் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம் குறைபாடுகளான மூலையில் வீக்கம் மற்றும் நரம்பு செயல்பாடு, தசை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பொட்டாசியம் உள்ள ஜிலேபி மீன் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
நம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகள் என்னெவென்றால் வைட்டமின்களை எடுத்துக்கொள்வதே ஆகும். அதற்கு ஜிலேபி மீன்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
எடை மேலாண்மை:
உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஜிலேபி மீன் உதவும். ஜிலேபி மீன் சிறு துண்டுகள் சாப்பிட்டாலும் அதிகம் உண்பது போல இருக்கும். மேலும் இதில் புரதம் அதிகமாக உள்ளது. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கிறது.
இருதயத்தின் ஆரோக்கியம்:
இருதயத்தில் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஜிலேபி மீன் உணவில் முக்கியமான ஒன்றாகும். ஜிலேபி மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு, பக்கவாதம், மாரடைப்பில் தடிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுவதற்க்கான அபாயத்தை குறைக்கின்றது. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இருதயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்:
எலும்பு ஆரோக்கியத்தில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிலேபி மீன் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்பு வளர்ச்சிக்கும் மட்டுமில்லாமல் உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு உணவு பொருளாகும். அதுமட்டுமில்லாமல் பற்கள் மற்றும் நகங்களுக்கு வலுவாகவும் நீடிப்பதற்கும் உதவுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும் தடுக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |