எவ்வளவு பெரிய தொப்பையையும் மூன்றே நாட்களில் குறைத்து விடலாம்..!

Tips to Reduce Belly Fat in Tamil

பொதுவாக அவரவர் உடல் அமைப்பு மற்றும் உணவுப்பழக்கத்தின் மூலமே உடல் எடை அதிகரிக்கின்றது. அதிலும் குறிப்பாக சிலருக்கு தொப்பை தான் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனை குறைப்பதற்காக நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்போம் ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள குறிப்பினை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி பாருங்கள் நீங்களே வியக்கின்ற அளவிற்கு நல்ல பலனை அளிக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தொப்பையை குறைத்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 10 நாட்களில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

Home Remedies to Reduce Belly Fat in Tamil:

Home Remedies to Reduce Belly Fat in Tamil

தொப்பையை குறைக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தனியா – 50 கிராம் 
  2. மிளகு – 10 கிராம்
  3. கருஞ்சிரகம் – 50 கிராம்
  4. தண்ணீர் – 1 டம்ளர்

கடாயை எடுத்து கொள்ளவும்: 

முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் தனியாவை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள்.

மிளகினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 10 கிராம் மிளகினை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள்.

கருஞ்சிரகத்தை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 50 கிராம் கருஞ்சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் வறுத்து வைத்துள்ள தனியா, மிளகு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு அதனை வடிக்கட்டி கொள்ளுங்கள். இதனை காலையில் வெறும் வயிற்றுடன் குடியுங்கள். இதனை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் மூன்றே நாட்களில் உங்களின் தொப்பை குறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய இதை செய்து பாருங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil