உப்பு கடலை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்கு தீனிகளில் உப்பு கடலையும் ஒன்று. இத்தகைய உப்பு கடலையினை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற ஒரு ஆசை வந்து விடும். அதனால் இதனை நாம் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவோம். இப்படிப்பட்ட உப்பு கடலையினை சில நேரத்தில் ஜூஸ் செய்து குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். ஆனால் சாப்பிடும் முறையிலும் நிறைய நன்மைகள் உள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் உப்புக் கடலையினை வைத்து ஜூஸ் செய்து குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அத்தகைய நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
உப்பு கடலையில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் C
- வைட்டமின் B6
- பாஸ்பரஸ்
- நியாசின்
- இரும்புசத்து
- தாமிரம்
- தியாமின்
- போலேட்
- நார்சத்து
உப்பு கடலை ஜூஸ் பயன்கள்:
வறுத்த உப்புக்கடலையினை பொடியாக செய்து அதனை சலித்து கொண்டு. அதன் பின்பு உப்பு கடலை பொடி 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை 1 டம்ளர் குளிர்ந்த தண்ணீரில் கலந்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதன் காரணமாக நிறைய நன்மைகள் ஏற்படுகிறது. ஆகையால் அத்தகைய நன்மைகள் என்னென்ன என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயிற்று பிரச்சனை:
உப்பு கடலையினை பயன்படுத்து செய்யக்கூடிய ஜூஸினை நாம் குடிப்பதன் மூலம் வயிறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு உகந்த ஒன்றாக உள்ளது.
செரிமான குழாயினை சுத்தம் செய்தல்:
தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸினை குடிப்பதன் மூலம் இதில் உள்ள நார்ச்சத்தானது செரிமான குழாயினை சுத்தம் செய்யவும் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சினையும் வெளியேற்றி ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
எப்போதும் இருப்பதை விட வெயில் காலத்தில் உடலில் அதிக ஹீட் இருக்கிறதா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. |
உடல் வெப்பம் குறைய:
உப்பு கடலையில் இருந்து தரக்கூடிய ஜூஸினை குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றமாக வைக்கவும் மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தினை குறைக்கவும் சிறந்த ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மூலநோய் கட்டுப்படும்:
மூலநோய் உள்ளவர்கள் இந்த ஜூஸினை குடிப்பதன் மூலம் மூலநோய் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது.
குடல் கொழுப்பு:
தினமும் காலையில் உப்பு கடலையில் தயார் செய்த ஜூஸினை குடிப்பதன் மூலம் குடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பினை வெளியேற்றுவதற்கு மிக சிறந்த பலனை அளிக்கிறது.
இதையும் படியுங்கள்⇒ மொச்சை கொட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |