உப்பு சத்து குறைய என்ன செய்ய வேண்டும் | உப்பு நோய் குணமாக
அன்பு நேயர்கள் அனைவருக்கும் அழகான வணக்கம்..! பொதுவாக இந்த பிரச்சனை அதிகளவு அனைவரையும் பாதித்து வருகிறது. அது என்ன தெரியுமா உப்பு நீர் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவருமே உடல் எடை அதிகமாக இருப்பார்கள். அதற்கு எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் நாம் தினமும் சாப்பிடும் பொருட்களின் அதிக உப்பு இருக்கும் அதனால் அவர்களுக்கு எளிமையாக உடலில் உள்ள தேவையில்லாத உப்பு தன்மையை குறைக்க என்ன சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்வோம்..! வாங்க
உடலிற்கு உப்பு சத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உப்பினால் வரும் பாதிப்பும் அதிகம். உடலில் உப்பு குறைந்தாலும் பிரச்சனை, உப்பு சத்து அதிகமானாலும் பிரச்சனை. ஆகையால், உடலில் உப்பு சத்து எப்போதும் அளவோடு இருக்க வேண்டும். உங்களுக்கு உடலில் உப்பு சத்து அதிகமானால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, அதனை பின்பற்றுங்கள்.
உப்பு சத்து குறைய சித்த மருத்துவம் | Uppu Sathu Kuraiya Tips in Tamil:
உடலில் உள்ள உப்பை குறைக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் உதவுகின்றன. அதில் சில முக்கிய வகைகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சுரைக்காய் நன்மைகள்:
வாரம் மூன்று முதல் நான்கு நாட்கள் சுரைக்காய் கூட்டு வைத்து சாப்பிட்டால் போதும் உடலில் தேவையில்லதா உப்பை குறைக்கிறது. அதன் பின் 10 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்து பாருங்கள் உங்களுக்கு நன்மை தெரியும்.
அதேபோல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் இதனை சாப்பிடலாம்.
நீர் சத்து உள்ள காய்கறி:
நீர் சத்து உள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் உப்பை குறைக்க முடியும் அதிலும் முக்கியமாக தர்பூசணி, கிர்ணி பழம், திராட்சை, வெள்ளரிக்காய் போன்ற பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அதேபோல் நீர் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான உப்பை உடலிலிருந்து வெளியேற்ற முடியும்.
பச்சை காய்கறிகள், பழங்களை ஒரு நாளுக்கு இரண்டு கப்புகள் எடுத்துக்கொள்ளலாம். இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நல்ல சத்துக்களை உடலில் தங்க வைக்கும், நீர் சத்துக்களை அதிகரித்து உப்பை குறைக்கும்.
காலை எழுந்தது வேலைக்கு போய் விட்டு வந்தும், தூங்குவதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவில் உப்பு அதிகம் சேர்த்து கொள்பவரா நீங்கள் அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க..!
அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் இருந்தால் தேவையில்லாத பிரச்சனை நம்மை வந்தடையும். அதே போல் உடலில் புரதத்தின் அளவு குறைந்தால் உப்பு சத்துக்கள் அதிகமாகும் ஆகவே புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் உப்பை குறைக்க முடியும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |