சிறுநீர் தொற்று இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்..?

சிறுநீர் தொற்று அறிகுறிகள்

சிறுநீர் தொற்று அறிகுறிகள் 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய நிலையில் அதிக மக்கள் சிறுநீர் பாதை நோய்த் தொற்றால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று நாம் சிறுநீர் பாதை நோய் தொற்று இருந்தால் உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் பாருங்கள் சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்

சிறுநீர் பாதை தொற்றுநோயின் அறிகுறிகள்: 

இந்த சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. பெரும்பாலும் இந்த நோய்த் தொற்று அதிகளவு பெண்களையே பாதிக்கின்றது. தோல் அல்லது மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள், சிறுநீர்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை பாதிக்கிறது. இதனால் தான் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படுகின்றன.

இந்த நோய்த் தொற்றுக்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த தொற்று ஏற்படலாம். இது ஒரு பாக்டீரியா நோய்த் தொற்று என்று மருத்துவ ஆய்வுகளில் கூறப்படுகிறது. இந்த தொற்று சிறுநீரகத்தின் உறுப்புகளை அடையும் போது  வெவ்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

மேலும் இந்த தொற்று கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த தொற்று இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கும்  ஏற்பட கூடும் என்று மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

சிறுநீர் தொற்று அறிகுறிகள்:

 1. அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சிறுநீர் சிறிதே வெளியேறும்.
 2. சிறுநீர் நிறம் மஞ்சள் நிறமாக இருக்கும். சில நேரம் துர்நாற்றம் வீச கூடும்.
 3. சிலநேரங்களில் அடிவயிற்றில் தசைபிடிப்பு போன்று இருக்கும்.
 4. சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
 5. சிறுநீர் கழிக்கும் போது அதிகமான எரிச்சல் ஏற்படும். சிலருக்கு கடுமையான வலி ஏற்படலாம்.
 6. சிலருக்கு இந்த தொற்றால் அதிக காய்ச்சல் ஏற்பட கூடும். குளிர் மற்றும் நடுக்கம் போன்ற உணர்வு ஏற்படும்.
 7. முதுகு பகுதியில் கடுமையான வலி இருக்கும்.
 8. இந்த தொற்றால் சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
 9. இந்த தொற்று இருந்தால் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்.
 10. இந்த சிறுநீர் பாதை தொற்றுக்களை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறினால் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
 11. இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், மருத்துவரை அணுகி ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்