வேலிபருத்தி இலையின் மருத்துவ பயன்கள் | Veliparuthi Plant Uses in Tamil

Advertisement

உத்தாமணி இலை பயன்கள் | Uthamani Plant Benefits in Tamil

மருந்து, மாத்திரைகள் இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் மூலிகைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். நோய்களுக்கு மூலிகைகளை எடுத்து கொள்வதால் அவை பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மூலிகை செடியில் ஒன்று தான் இந்த வேலிப்பருத்தி. இதற்கு உத்தமக் கன்னிகை, அச்சாணி மூலி, உத்தம தாளி போன்ற வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. இது வேலிகளில் படரக்கூடிய ஒரு தாவரமாகும். இந்த வேலிபருத்தியால் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வயிற்று வலி நீங்க:

uthamani plant benefits in tamil

  • Veliparuthi Plant Uses in Tamil: உடல் உஷ்ணம் அதிகரிப்பதாலும் அல்லது காரமான உணவுகளை சாப்பிட்டாலும் ஒரு சிலருக்கு வயிற்று வலி ஏற்படும். வயிற்று வலி நீங்குவதற்கு வேலிப்பருத்தி இலை சாறுடன் தேன் கலந்து குடித்து வரலாம்.
ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

சளி, இருமல் நீங்க:

uthamani plant benefits in tamil

  • Veliparuthi Medicinal Uses in Tamil: பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இருமல், சளி, மூச்சு திணறல் இருக்கிறது.
  • சளி அதிகமாக இருந்தால் நெஞ்சில் கோழை கட்டி இருக்கும். இதனை நீக்குவதற்கு உத்தாமணி இலையின் சாறை காலை, மாலை இரண்டு முறை குடித்து வரலாம்.

குடல் புழுக்கள் நீங்க:

veliparuthi plant uses in tamil

  • Veliparuthi Benefits in Tamil: ஒரு சிலருக்கு வயிற்றில் சேரக்கூடாத கழிவுகள் தங்குவதால் குடலில் புழுக்கள் இருக்கும்.
  • வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு வேலிப்பருத்தி இலை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வரலாம்.

மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் மலட்டு தன்மை நீங்க:

உத்தாமணி இலை பயன்கள்

  • Uthamani Plant Benefits in Tamil: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவற்றை நீக்க இந்த இலை உதவியாக இருக்கும்.
  • பெண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை நீங்க வேலிப்பருத்தி இலை 6 எடுத்து அதனை சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டு தன்மை நீங்கும்.

யானைக்கால் நோய்: 

veliparuthi plant uses in tamil

  • உத்தாமணி இலை பயன்கள்: கொசு கடி அல்லது பரம்பரை காரணமாக ஒரு சிலருக்கு யானை கால் நோய் இருக்கும். இந்த நோயை சரி செய்ய உத்தாமணி இலை சாறுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வரலாம்.
  • யானைக்கால் நோய் இருந்தால் வீக்கம், வலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். வீக்கம் மற்றும் வலியை குணப்படுத்த வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன், சுக்கு தூள், மிளகு தூள் சேர்த்து பத்து போட்டு வந்தால் வீக்கம் விரைவில் குணமாகும்.

மூட்டு வலி, இடுப்பு வலி நீங்க:

veliparuthi plant uses in tamil

  • Veliparuthi Plant Uses in Tamil: உத்தாமணி இலையை நீர் சேர்க்காமல் அரைத்து ஒரு துணியில் கட்டி, அதை தோசை கல்லில் வைத்து சூடாக்கி, எடுத்து மூட்டு வீக்கம் மற்றும் இரத்த கட்டு இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம்.
  • வேலிப்பருத்தி இலையை நல்லெண்ணெயில் வதக்கி இடுப்பு வலிக்கு மற்றும் மூட்டு வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

மூச்சு திணறல் குணமாக:

வேலிபருத்தி பயன்கள்

  • வேலிபருத்தி பயன்கள்: ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவது சற்று சிரமமாக இருக்கும்.
  • குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஆஸ்துமா தீவிரமாக இருக்கும். வேலிப்பருத்தி இலை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement