வெண்டைக்காய் நன்மைகள் | Vendakkai Nanmaigal in Tamil
வெண்டைக்கையை நாம் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. பொதுவாக வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு சத்துகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
வெண்டைக்காயை வேகவைத்து வறுவல், பொரியல், குழம்பு, இன்னும் பல முறைகளில் வேகவைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் வெண்டைக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதை பொதுநலம்.காமில் படித்து தெரிந்துகொள்வோம்.
வெண்டைக்காய் பயன்கள் |
வெறும் வயிற்றில் வெண்டைக்காய்:
- இரவு தூங்குவதற்கு முன் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- அதன் பின்னர் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்த வெண்டைக்காயாவும் அதில் சேர்க்கவும்.
- இரவு முழுதும் அதை ஊற வைக்க வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் பருகினால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
எலும்பு வலிமை பெற:
- வெண்டைக்காய் நீரை குடிப்பதால் எலும்புகள் பலப்படும். மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) பிரச்சனை வருவதை தடுக்கிறது. எலும்புகள் வலிமையாக இருக்க வெண்டைக்காய் நீரை குடிப்பது நல்லது.
ஆஸ்துமா சளி:
- சுவாச பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை குடிப்பதால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனையிலுருந்து குறைவதாக பல ஆய்வுகள் சொல்லப்படுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலம்:
- வெண்டைகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆதலால் வெண்டைக்காய் நீரை குடிப்பதனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி போன்ற பிரச்சனையிலுருந்து பாதுகாக்கிறது.
மலச்சிக்கல் தீர:
- வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் வெண்டைக்காய் நீரை குடிப்பதால் குடல் சீராக நடைபெற்று மலசிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
- வெண்டைக்காய் நீரை தினமும் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய பிரச்சனை வராமல் தடுக்கிறது.
சுகர் குறைய:
- நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் குடித்தால் இரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.
குடல் புற்றுநோய் தடுக்க:
- வெண்டைக்காய் நீரை பருகுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். எப்படியென்றால் வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் வழியை சுத்தம் செய்யும். அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் குடியுங்கள்.
இரத்த சோகை நீங்க:
- இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டைக்காய் நீர் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
வறட்டு இருமல் சரியாக:
- தொடர்ந்து இருமல், வறட்டு இருமல் உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
- வெண்டைக்காய் நீரை குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. ஆகவே வெண்டைக்காய் நீரை பருகுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |