Yelakki Banana Benefits in Tamil | ஏலக்கி வாழைப்பழம் பயன்கள்
நண்பர்களே நம் அனைவருக்கும் தெரியும் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே நாம் பழக்கடைகளுக்கு சென்று அங்கு முதலில் வாங்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அது உடல்நிலை சரி இல்லை என்றாலும் வாழைப்பழம் வாங்குவார்கள். அதேபோல் வீட்டில் என்ன பூஜை நடந்தாலும் அங்கு இந்த வாழைப்பழம் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் நடக்காது. அந்த அளவிற்கு இந்த வாழைப்பழம் மிகவும் முக்கியமாக விளங்குகிறது. வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் ஏலக்கி பழம் ஆகும். இந்த பழத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
வாழைப்பழம் வகைகள் பெயர்கள்:
வாழைப்பழத்தின் பெயர்களை பற்றி தெரிந்துகொள்ள Types of Banana
Yelakki Banana Nutrition in Tamil:
- கலோரிகள்: 89
- நீர்: 75%
- புரதம்: 1.1 கிராம்.
- கார்போஹைட்ரேட்டுகள்: 22.8 கிராம்.
- சர்க்கரை: 12.2 கிராம்.
- ஃபைபர்: 2.6 கிராம்.
- கொழுப்பு: 0.3 கிராம்
Yelakki Banana Benefits in Tamil:
உடல் சோர்வு நீங்க:
ஏலக்கி வாழைப்பழத்தில் நார்சத்துகள், வைட்டமின் B6 மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் உள்ளது. ஆகவே இதனை தினமும் உட்கொள்வதால் உடல் சோர்வு நீங்கி உடலில் நல்ல சுறுசுறுப்பு கிடைக்கும். அதேபோல் நாள் முழுவதும் திறன்பட செயல்பட வைக்கும்.
இரத்த சோகையை தடுத்தல்:
இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் B6 சத்துக்கள் அதிகம் உள்ளது. அதேபோல் உடலுக்கு அதிக தேவையான இரும்பு சத்துக்கள் உள்ளது. மேலும் ஹீமோகுளோபின் அளவை நேரடியாக பாதித்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவி புரிகிறது. அதேபோல் இரத்த சோகையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
மலச்சிக்கல் தீர என்ன சாப்பிட வேண்டும்:
இந்த பிரச்சனை அனைவருக்கும் இருந்து வருகிறது. சிலர் சொல்வார்கள் வாழைப்பழம் சாப்பிடுங்கள் மலசிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள் என்று. ஆனால் இந்த ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடனடியாக பிரச்சனைலிருந்து விடுபட முடியும்.
அல்சருக்கு வாழைப்பழம் சாப்பிடலாமா:
ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தால் இந்த அல்சர் வந்துவிடும். ஆனால் ஏலக்கி வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனையை தடுக்கலாம். இது வயிற்றில் புண்கள் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
இதனை தவிர இரத்த அழுத்தத்தை சீராக்கும், மன இறுக்கத்தை குறைக்கும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம், நினைவாற்றல் மேம்படும், கண்களுக்கு மிகவும் நல்லது. ஆகவே தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.
உங்கள் குழந்தை எடை அதிகமாக வேண்டுமா அதற்கு ஏற்ற மருந்தாக உள்ளது இந்த நேந்திர வாழைப்பழம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |