தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food for 6 months..!

baby food recipes with herbs & spices

தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food recipes with herbs & spices..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று பொதுநலம் பதிவில் தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

Baby food recipes with herbs & spices: பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் ஆகாரம். ஆறு மாதங்கள் வரை தண்ணீர் கூட தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 3 மாதங்களாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது தான் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இங்கு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் போது காரம் சேர்க்கலாமா? எதை சேர்க்கலாம்? எப்போது சேர்க்கலாம்? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதுதான்.

தாய்மார்களின் பயத்துக்கு காரணம் ஆரம்பத்தில் பழக்கப்படுத்தாத உணவுகளை அவர்கள் வளர்ந்த பிறகு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாமல் போய்விடுவார்கள்,  இதனால் சத்துக்கள் உடலுக்குள் சேராமல் போய்விடும் என்பதுதான் அவர்களின் மிகப்பெரிய கவலை.

தாய்மார்களின் சந்தேகத்தை முழுமையாக போக்க இந்த பதிவில் கூறியுள்ள குழந்தைக்கு(baby food recipes with herbs & spices) கொடுக்கவேண்டிய உணவுகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..!

newபிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு திட உணவு / baby food recipes with herbs & spices:

முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளின் 7 ஆம் மாத துவக்கத்தில் திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்க தொடங்கி விடுவார்கள். இனிப்பு நிறைந்த உணவுகளை சப்பு கொட்டி சாப்பிடும் குழந்தைகள், கார உணவையும் உஸ் உஸ் என்று சொன்னாலும் சாப்பிடவே செய்தார்கள். குழந்தைக்கு எல்லா சுவையும் சேர வேண்டும் என்பதில் கவனமெடுத்து குழந்தைக்கு உணவு தயாரித்தவர்கள் நம் முன்னோர்கள்.

இப்போது குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் போது கஞ்சி, கீரை, காய்கறி சூப் போன்றவற்றையும் கொடுப்பது வழக்கம். இனிப்பு கஞ்சி, உப்பு கஞ்சி என்ற இரண்டு வகையிலும் பல வகைகள் உண்டு.

பாதாம், கேழ்வரகு, தானியம் நிறைந்த சத்து கஞ்சி, அரிசி பருப்பு கஞ்சி என இதன் பட்டியல் நிறையவே உள்ளது. இதில் எதற்கு என்னென்ன மசாலா பொருள்களை சேர்த்து குழந்தைகளுக்கு பழகலாம் என்று முழுமையாக பார்க்கலாம் வாங்க.

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food 6th month / baby food recipes with herbs & spices:

குழந்தைக்கு உணவு கொடுக்க தொடங்கும் போது அதாவது 6 மாதம் ஆனதும் (baby food for 6 months) குழந்தைக்கு உணவில் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசி பருப்பு உடைத்து, காய்கறிகளை சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

அப்போது பெருங்காயம் சிட்டிகை அளவு சேர்த்து குழைத்து உணவோடு கொடுக்க வேண்டும். அடுத்து உப்பு சேர்த்த கஞ்சி கொடுக்கும் போதும் இதே அளவு பெருங்காயம் கலந்து கொடுக்கலாம்.

பெருங்காயம் குழந்தைக்கு செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் வயிற்று பொருமல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுவிக்கிறது.

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food for 7 months:

மருத்துவ குணமிக்க மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மஞ்சள் தூளை குழந்தையின் உணவில் சிட்டிகை அளவு சேர்க்கலாம்.

திட உணவுகளான கஞ்சி, காய்கறி சூப், அரிசி, பருப்பு, காய்கறி சேர்த்த கலவை கஞ்சி போன்றவற்றில் மஞ்சள் சிட்டிகை அளவு சேர்ப்பது மிகவும் நல்லது.குழந்தைக்கு 7 ஆம் மாதம்(baby food for 7 months) தொடக்கத்தில் இருந்து இதை கொடுக்கலாம்.

பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பாற்றால் குறைபாடு இருந்தால் அதை சரி செய்யகூடிய அளவுக்கு மிகவும் ஆற்றல் மிகுந்தது மஞ்சள். குழந்தைக்கு அடிக்கடி உண்டாகக்கூடிய சளி, இருமல் போன்ற பிரச்சனையை வராமல் தடுக்கும். குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் தூள் நிச்சயமாக உதவும்.

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food 6th month:

சீரகத்தை இலேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ளவும். பொடி செய்து வைத்துக்கொண்ட பிறகு குழந்தைக்கு சூப், கஞ்சி, சுண்டல் வகையில் தாளிப்பு சேர்க்கும் போது உப்பு சேர்க்கும் அனைத்திலும் ஜீரகத்தை சேர்க்கலாம்.

இவை தவிர குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கும் போது கால் டீஸ்பூனில் பாதி அளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து கொடுங்கள். குழந்தை தண்ணீர் குடிக்க தொடங்கும்போதே 6 ஆம் மாதம்(baby food for 6th months) முதல் இதை கொடுக்க தொடங்கலாம்.

ஜீரகம் குழந்தைகளின் மந்ததன்மையை போக்கும். செரிமானத்தை தூண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையின் பசி உணர்வை அதிகரிக்க செய்யும்.

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food for 7 months:

சமையலறையில் மசாலாக்கள் நிறைந்த நறுமணமிக்க பொருளில் முக்கியமானது பட்டையும் ஒன்று. இந்தியாவில் பெரும்பாலும் அசைவம், மசாலாக்கள் நிறைந்த உணவில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். உணவின் சுவையை மீறிய வாசனை இந்த பட்டைக்கு அதிகமாவே உண்டு.

பட்டையை இடித்து பொடி செய்து வைத்து கொண்டு 7 மாதங்களுக்கு(baby food homemade) பிறகு குழந்தைக்கு தரக்கூடிய ஓட்ஸ் கஞ்சி, உப்பு கஞ்சி, தானிய கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றை தயாரிக்கும் உணவுகளில் சிட்டிகை அளவு இதையும் சேர்த்துகொடுங்கள். மசாலா நறுமணத்தை குழந்தைகள் விரும்ப தொடங்கி விடுவார்கள்.

newகுழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..!

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food 6th month:

மசாலா உணவை அலங்கரிக்க பயன்படுத்தும் பொருளாக கொத்தமல்லி விளங்குகிறது. 6 மாத குழந்தைக்கு(baby food for 6th months) திட உணவு தொடங்கும் போது கடித்து மெல்லகூடிய உணவையோ அல்லது கடின உணவையோ தருவதில்லை. அதனால் இந்த தழைகளை சேர்ப்பதற்கு முன்பு மிகச் சிறியதாக நறுக்குங்கள். இல்லையெனில் குழந்தைக்கு விழுங்க தெரியாது.

சற்று பெரிய தழையாக இருந்தால் குழந்தையின் தொண்டையிலும் சிக்கிகொள்ளும். சிறியதாக நறுக்கி சூப், கஞ்சியில் சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.

7 மாதங்கள் நிறைவடையும் தருணத்தில் இந்த கொத்துமல்லி தழைகளை சேர்க்க தொடங்குங்கள்.அதிகளவு வேண்டாம் நறுக்கிய பிறகு கால் டீஸ்பூன் அளவு சேர்த்தால் போதுமானது.

தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு / baby food for 6 months:

குழந்தைக்கு கொடுக்கும் பழச்சாறு, சூப் போன்றவைகளை தவிர்த்து, சத்து நிறைந்த கஞ்சி, தானிய இனிப்பு கஞ்சி, கீர், பாதாம் கஞ்சி போன்று கொடுப்பது தான்  வழக்கம். அப்போது சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொடுக்கலாம். ஏலத்தூள் சேர்க்கும் போது பொடியை மட்டும் சேருங்கள் ஏலாக்காய் தோலை நீக்கிவிடுவது நல்லது.

6 ஆம் மாதத்தில்(baby food 6th month) கஞ்சி உணவு பழக்கும் போதே இதை சிட்டிகை அளவிற்கு சேர்க்கலாம். செரிமானத்துக்கு உதவும் ஏலக்காயில் சத்துகளும் குறைவில்லாமல் கிடைக்கிறது. இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், ரைபோஃப்ளேவின்கள், வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. இது குழந்தைக்கு இரத்த சோகை வராமல் தடுக்கும்.

newகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்