குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..!

Baby weight gain food in tamil

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..!

Baby weight gain food in tamil:- ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க வேண்டியது தாய்மார்களின் மிக முக்கிய கடைமையாகும். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் சிலவற்றை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

Baby weight gain food in tamil..!

தாய்ப்பால்:

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 1

குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பாலினை கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமான செயலாகும்.

ராகி – கேழ்வரகு:-

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 2

கேழ்வரகில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் கொடுக்கலாம்.கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுகளை ஆறு மாத குழந்தைகள் முதல், அனைத்து வயதிற்குட்பட்டவர்களும் சாப்பிடலாம்.

கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின் பி1, பி 2 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு ராகியில் செய்யப்பட்ட உணவுகள் மிக எளிதில் செரிமானமாகும். எனவே குழந்தைகளுக்கு ராகி குக்கீஸ், ராகி கேக், ராகி லட்டு, ராகி புட்டு, ராகி ரொட்டி, ராகி தோசை, ராகி இட்லி, ராகி கூல், ராகி கஞ்சி போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..!

பசு நெய்:

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 3

பசு நெய்யில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க நினைக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை 8 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால், தங்கள் குழந்தையின் உணவில் சிறிதளவு நெய்யினை சேர்த்து கொள்ளலாம். நெய்யினை கிச்சடி, உப்புமா, பொங்கல், சப்பாத்தி, பருப்பு சாதம், பராத்தா போன்ற உணவுகளில் சேர்த்து கொடுக்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு:

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 4

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இந்த இனிப்பு சுவையுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கினை சேர்த்து வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதினால் குழந்தையின் உடை எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும் குழந்தைகளுக்கு மிக எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

மேலும் ஃபார்முலா மில்க் அல்லது தாய்ப்பாலினை சர்க்கரைவள்ளி கிழங்குடன் சேர்த்து கூல் செய்தும் கொடுக்கலாம்.

கிச்சடி உணவுகள்:-

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 5

சிறுதானியங்கள், அரிசி, காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை சேர்க்கப்பட்டு, தயார் செய்த கிச்சடி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு பவுல் கிச்சடியில் விட்டமின், தாதுக்கள், மாவுச்சத்து, புரதம் கொழுப்புச்சத்துக்கள் உள்ளன.

எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நினைக்கும் தாய்மார்கள், கிச்சடி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

நட்ஸ் பவுடர்:-

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் / Baby weight gain food in tamil: 6

நட்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, குழந்தையின் உணவுகளில் நட்ஸ் பவுடரினை சேர்பதினால் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க முடியும். நட்ஸினை குழந்தைகளுக்கு முழுமையாக கொடுத்தால் குழந்தையின் தொண்டைப் பகுதியில் மாட்டி கொள்ளும்.

எனவே குழந்தைகளுக்கு அரைத்த நட்ஸ் பவுடரை கொடுக்கலாம். அதாவது ஜூஸ், ஸ்மூத்தி, கேக், பிளம்கேக் போன்றவற்றில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க (Baby weight gain food in tamil) ஆரம்பிக்கும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்