குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க

easiest way to childrens sleep in tamil

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி.?

ஹாய் நண்பர்களே.! இன்றைய பதிவில் குழந்தைகளை தூங்க வைப்பதற்கான சில வழிமுறைகளை தான் பார்க்க போகிறோம். குழந்தைகளை தூங்க வைப்பது பெற்றோர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். உணவை கூட ஊட்டி விற்றலாம். ஆனால் 3 வயது வரைக்கும் உள்ள  குழந்தைகளை  தூங்க வைப்பது கஷ்டமான ஒன்றாகும். 3 வயதுக்கு மேலே அந்த குழந்தைகளாவே தூங்க செய்வார்கள். நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை. உங்கள் வீட்டில் 3 வயது குழந்தைகள் இருக்கின்றதா. அந்த குழந்தைகளை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இனி அந்த கஷ்டம் வேண்டாம். வாங்க அதற்கான டிப்ஸை தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பிறந்த குழந்தை நன்றாக தூங்க வைப்பது எப்படி..?

குழந்தைகள் தூங்கும் நேரம்:

குழந்தைகள் தூங்கும் நேரம்

 

தினமும் குழந்தைகளை ஒரே நேரத்திற்கு தூங்க சொல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு தூங்க சொன்னால் தூக்கம் வராது. அதனால் ஒரே நேரத்தை தூங்குவதற்கு பின்பற்றுவது நல்லது.

கதை சொல்லி தூங்க வை:

கதை சொல்லி தூங்க வை

நீங்கள் தினமும் குழந்தைகளுக்கு கதைகளை சொன்னால் தூங்கி விடுவார்கள். கதைகளை கேட்கும் போது கதையின் கற்பனைக்கு சென்று விடுவார்கள். அதனால் ஈசியாக தூக்கம் வந்துவிடும்.

தூங்கும் போர்வை:

தூங்கும் போர்வை

குழந்தைகளுக்கு நல்ல கனமான போர்வையை போற்றுவதன் மூலம் தூக்கம் வரும். அந்த கனமான போர்வை இறுக்கத்தை ஏற்படுத்தி தூக்கம் வந்து விடும்.

படுக்கையறை:

படுக்கையறை

குழந்தைகளின் படுக்கையறையில் உள்ள லைட்டின் வெளிச்சம் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் தூக்கம் வரும். லைட் பளபளப்பாக இருந்தால் தூக்கம் வராது.

இரவு உணவு என்ன சாப்பிடலாம்:

இரவு உணவு என்ன சாப்பிடலாம்

குழந்தைகளுக்கு இரவு உணவு ரொம்ப முக்கியமானது. இரவில் மட்டும் குழந்தைகளை சாப்பிடாமல் படுக்க சொல்லாதீர்கள். இரவு நல்லா சாப்பிட்டு தூங்கினால் தான் தூக்கம் வரும். சாப்பிடாமல் தூங்கினால் தூக்கம் வராது.

உரையாடுவது:

உரையாடுவது

குழந்தைகளிடம் அன்றைய தினம் என்ன நடந்தது என்று கேட்கலாம். இல்லையென்றால் நீங்கள் நடந்ததை சொல்லலாம். அப்படி சொல்லும் போது விரைவாக தூங்கி விடுவார்கள்.

இசை கேட்பது:

இசை கேட்பது

நிறைய நபருக்கு உள்ள பழக்கம் எதாவது மன குழப்பம் இருந்தால் இசை கேட்பார்கள். அப்படி கேட்கும் போது மனம் அமைதியாகி விடும். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். அதனால் குழந்தைகள் இசை கேட்பதன் மூலம் சந்தோஷம் ஆகிவிடுவார்கள. இதனால் ஈசியாக தூங்கி விடுவார்கள்.

குட் நைட்:

நீங்கள் குழந்தைகளுக்கு குட் நைட் சொன்னால் தூங்கும் நேரம் வந்துவிட்டது. தூங்க வேண்டும் என்று நினைத்து தூங்க செல்வார்கள்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் குழந்தைகளை தூங்க வையுங்கள். உங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. அவர்கள் அழகாக தூங்கி விடுவார்கள்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil