குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள் (Eye Power Increase Food In Tamil)..!
குழந்தையின் கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். ஒரு குழந்தையின் கண்களில் தெரியும் ஆரோக்கியம், அந்த குழந்தை உடல்ரீதியாக எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதை குறிக்கின்றது.
சரி இந்த பகுதியில் குழந்தையின் கண் பார்வையை மேம்படுத்த என்னென்ன உணவுகளை (Eye Power Increase Food In Tamil) குழந்தைகள் தினமும் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!! |
குழந்தையின் கண் பார்வை பிரச்சனைக்கான காரணங்கள்:
தொலைக்காட்சிக்கு அருகில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் படம் பார்ப்பது.
இரவில் தாமதமாக உறங்குவது. இதன் காரணமாக கண்களுக்கு தேவையான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.
அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது. அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களைப் பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது.
மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
இவை அனைத்தையும் விட முக்கிய காரணமாக, வளரும் குழந்தைகள் தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளாததும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு கிடைப்பதில்லை.
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள் (Eye Power Increase Food In Tamil):
குழந்தையின் கண்பார்வை திறனை அதிகரிக்க – முட்டை:
முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதும் பாதுகாக்கிறது. முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் குழந்தையின் கண் பார்வை திறன் ஆரோக்கியமாகிறது.
குழந்தை கண் பராமரிப்பு – மீன்:
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்க ஒமேகா –3 கொழுப்பு அமிலம் அதிகம் தேவைப்படுகின்றது. குறிப்பாக இந்த சத்து ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது. அதேபோல் கண் உலர்ந்து போவதை தடுக்கின்றது. எனவே குழந்தையின் கண் பார்வை மேம்பட குழந்தைகளுக்கு அதிகளவு கடல் மீன்களை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்க – கீரை வகைகள்:
பச்சை கீரை வகைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் இ நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. எனவே ஆயுள் வரை குழந்தையின் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கவும், கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கவும். வளரும் குழந்தைகளுக்கு இவ்வகை கீரைகளை உணவில் அதிகளவு சேர்க்கவும்.
குழந்தை கண் பராமரிப்பு – ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள்:
வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வை திறனை அதிகரிக்க தினமும் அதிகளவு ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு தினமும் குழந்தைகள் சேர்த்து கொள்ள வேண்டும். அதாவது மாம்பழம், ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை ஆகியவற்றை அதிகளவு சேர்த்து கொள்வதினால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை |
சூரிய காந்தி விதை:
சூரிய காந்தி பூக்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்க பயன்படுகின்றது, மேலும் கண்களில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் சரி செய்ய உதவுகின்றது.
குழந்தை கண் பராமரிப்பு – நாவல் பழம் மற்றும் திராட்சை பழம்:
நாவல்பழம் மற்றும் திராட்சை பழங்களில் அதிகளவு நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்த மிகவும் பயன்படுகின்றது. எனவே வளரும் குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்க இந்த இரண்டு பழங்களில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி கொடுத்து வரவும்.
முட்டை கோஸ்:
கண் பார்வை திறனை அதிகரிக்க முட்டை கோஸ் மிகவும் உதவுகின்றது, குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் உயிர்ச்சத்து சி மற்றும் உயிர்ச்சத்து இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
குழந்தை கண் பராமரிப்பு – பூக்கோசு:
குழந்தையின் கண் பார்வைக்கு இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மிகவும் பயன்படுகின்றது.
எனவே இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் பூக்கோசை விரும்பி உண்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
சர்க்கரை வள்ளி கிழங்கு:
குழந்தையின் கண் பார்வைக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு மிகவும் பயன்படுகின்றது. இதில் பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.
குழந்தை கண் பராமரிப்பு – பால் பொருட்கள்:
குழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்க பால் சார்ந்த பொருட்கள் மிகவும் பயன்படுகின்றது. அதாவது பால், வெண்ணெய், தயிர், நெய், பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது.இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
தண்ணீர்:
தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.
பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம்.இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.
அதாவது தினம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உகந்தது.
குழந்தை கண் பராமரிப்பு – விதை மற்றும் பருப்பு வகைகள்:
முந்திரி, பாதாம் போன்ற சில கொட்டை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து இ சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். பட்டாணி, மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் நிறைந்து உள்ளன.
இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |