குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு சில ஐடியாக்களை தெரிந்து கொள்ளுவோம். குழந்தைகளை சாப்பிட வைப்பது மிக பெரிய போராட்டமாக இருக்கும். அம்மாக்களும் என்ன என்னமோ பண்ணி பார்ப்பார்கள் சில குழந்தைகள் நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் போல சாப்பிடவே மாட்டார்கள். கொஞ்ச நேரம் பொறுமையாக ஊட்டி விடுவோம். அதற்கு பிறகு பொறுமை இருக்காது. நீங்கள் இது மாதிரி கஷ்டப்பட வேண்டாம். குழந்தைகளே சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். வாங்க எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க
நேரத்தில் உணவு:
குழந்தைகளுக்கு முதலில் உணவை முறையாக கொடுக்க வேண்டும். கண்ட கண்ட நேரத்தில் உணவுகளை கொடுக்க கூடாது. காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சரியாக கொடுக்க வேண்டும். எண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் கொடுக்காதீர்கள். பிஸ்கட் வகைகளும் கொடுக்காதீர்கள். இந்த மாதிரி ஸ்னாக்ஸ் கொடுத்தால் குழந்தைகளுக்கு பசி இருக்காது. அப்பறம் எப்படி சாப்பிடுவார்கள். அதனால் ஸ்னாக்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பசி எடுக்கவில்லை:
குழந்தைகளுக்கு பசி இருக்கும் போது உணவுகளை கொடுக்க வேண்டும். பசி இல்லாத போது சாப்பிடு என்று கட்டாயப்படுத்த கூடாது. கட்டாயப்படுத்தினால் குழந்தைகள் உணவுகளை வெறுப்பார்கள். அதனால் இந்த தவற செய்யாதீர்கள்.
உணவு பற்றிய கதைகள்:
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி பேசி கொண்டே உணவை கொடுங்கள். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு நிலவை காட்டி உணவு ஊட்டுவார்கள். இப்பொழுது போனை பார்த்து உணவை ஊட்டுகிறார்கள். வெளியில் வைத்தோ அல்லது அவர்களுக்கு பிடித்த எதையாவது காமித்து உணவை ஊட்டி விடுங்கள்.
பிடிக்காத உணவு:
நீங்கள் உணவு சமைத்து வைத்து குழந்தைகளை சாப்பிட அழைக்கிறீர்கள். அவர்களுக்கு உணவு வாயில் வைத்தது பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்.? உடனே கோவப்பட கூடாது. சிறுது நேரம் சமாதானம் செய்ய வேண்டும். அப்படியும் அவர்கள் சாப்பிட முடியாது என்று சொன்னால் வேற உணவு செய்து கொடுக்க வேண்டும்.
காய்கறி வாங்க:
காய்கறிகள், பழங்கள் வாங்க வெளியில் செல்லும் போது குழந்தையும் அழைத்து செல்லுங்கள். குழந்தைகளை காய்கறிகள், பழங்கள் எடுக்க சொல்லுங்கள். எந்தெந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று சொல்லி கொடுங்கள். இப்படி சொல்லும் போது உணவின் மீது ஆர்வம் ஏற்படும்.
பிடித்த மாதிரி:
குழந்தைகளுக்கு உணவுகளை வைக்கும் போது அதை வித்தியாசமாக வையுங்கள். பார்ப்பதற்கே அழகாக உள்ளது போல் உணவை வையுங்கள். இப்படி செய்யும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.
உணவு உண்ணும் போது செய்ய கூடாதவை:
குழந்தைகள் உணவு சாப்பிடும் போது போன் பார்த்து சாப்பிட கூடாது. உணவில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். உணவை ருசித்து சாப்பிட வேண்டும். தொலைக்காட்சி பார்த்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இனிப்பு உணவு:
குழந்தைகளுக்கு இனிப்பு அதிகமாக கொடுக்க கூடாது. இனிப்பை மட்டும் சாப்பிட்டால் மற்ற உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் குழந்தைகளை பராமரித்தால் சாப்பிட அடம் பிடிக்க மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் ⇒குழந்தைகளை வளர்த்தால் இப்படி தான் வளர்க்க வேண்டும்..
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |