கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண…

கருப்பை நீர்க்கட்டி

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? வெறும் பட்டை போதும் இத சரிபண்ண…

(Ovarian cyst treatment)

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வர என்ன காரணம்:

மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஏற்படுகிறது. இது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos / karupai neerkatti) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை தான்.

மேலும் மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து இந்த கட்டிகள் தோன்றுகின்றது. ஒரே ஒரு செல் திரும்ப திரும்ப மறு உற்பத்தியாகி கட்டிகள் தோன்ற செய்கிறது. இந்த கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு கருப்பையையே பெரிதாகும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம்.

PCOSன் முந்தைய நிலைதான்(Starting Stage). கருப்பையில் கட்டிகள், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள். உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண் தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

 

பிசிஓஎஸ் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்களில், சினை முட்டை முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பின்) நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.

இதனால் பெண்களின் மாதாந்திர Cycle, முறையற்ற மாதவிலக்கு, மாதவிலக்கே வராமல் போவது, உடல் பருமன் அடைவது, உடலில் முடிவளர்ச்சி இருப்பது, மற்றும் முகப்பரு போன்ற தோல் தொடர்பான வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது.

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக லவங்கப்பட்டை (Ovarian cyst treatment):

Neerkatti vara karanam in tamil:- நீர்க்கட்டி குணமாக  லவங்கப்பட்டை – இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால், நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் தூவி கொள்ளலாம்.

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா மற்றும் புரத சத்துகள் உதவுகின்றன. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.

 

யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!

 

இதுபோன்ற பல ஆரோக்கியம் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ->ஆரோக்கிய குறிப்புகள்