வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்..!

What Foods Should a Child Avoid During Summer Season in Tamil

பொதுவாக குழந்தைகள் என்றாலே அவர்களை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பருவகால மாற்றத்தில் மிக மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். ஆம் நண்பர்களே குறிப்பாக அவர்களின் உணவு முறைகளை சரியாக கவனித்தால் மட்டுமே அவர்களின் உடல்நலத்துக்கு எந்த ஒரு தீமையும் ஏற்படாது.

அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 5 உணவுகளை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள உணவுகளை உங்களின் குழந்தைகளுக்கு மறந்தும் கொடுத்து விடாதீர்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

Foods to Avoid for Child in During Summer Season in Tamil:

1. அதிக காரம் உள்ள உணவுகள்:

Foods to Avoid for Child in During Summer Season in Tamil

பொதுவாக கோடை காலத்தில் இந்தியாவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும். அப்படி உள்ள நிலைமையில் குழந்தைகளுக்கு அதிக காரமுள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

இந்த மாதிரியான உணவுகள் குழந்தைகளின் உணவு மண்டலத்தால் ஜீரணிக்க முடியாததால் குமட்டல், வயிற்று வலி மற்றும் வேறு ஏதேனும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதனால் குழந்தைகளுக்கு அதிக காரமுள்ள உணவுகளை கொடுக்க கூடாது.

2. தெரு கடைகளில் விற்கப்படும் உணவுகள்:

What are the Foods Should a Child Avoid During Summer in Tamil

கோடை காலத்தில் தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளில் தூசி, புகை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் துகள்களும் உணவுகளுடன் கலந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாதிரியான தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளை அளிப்பது அவர்களின் உடல்நலத்தை மிகவும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான தெருக்கடைகளில் விற்கப்படும் உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

3. குளிர்பானங்கள்:

Foods to avoid in summer in tamil

பொதுவாக கோடை காலத்தில் குழந்தைகள் குளிர்பானங்களை மிகவும் விரும்பி பருகுவார்கள். இது உடனடி புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தருகிறது. ஆனால் இந்த குளிர்பானங்களை பருகுவது பெரியவர்களுக்கே அதிக தீங்கு விளைவிக்கும்.

அப்படி இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு இந்த குளிர்பானங்களை கொடுப்பது முற்றிலும் தவறான விஷயம் ஆகும். அதனால் கோடை காலத்தில் அதிக அளவு குளிர்பானங்களை உட்கொள்வது குழந்தைகளுக்கு பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

4. துரித உணவுகள்:

Top 5 foods to avoid in summer in tamil

கோடை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுத்து விடாதீர்கள். ஏனென்றால் துரித உணவுகளில் அதிக அளவு எண்ணெய் பொருட்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு இவ்வகை துரித உணவுகள் பல வகையான நோய்களை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த மாதிரியான கனமான எண்ணெய் உணவுகள் உங்கள் குழந்தையின் உடலில் கொழுப்பை அதிகரிக்கும். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு அதிக சோர்வு ஏற்படும்.

5. வறுத்த உணவுகள்:

5 foods to avoid in summer in tamil

உலகில் உள்ள அனைத்து வகையான வறுத்த உணவுகளும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக உள்ளது. துரித உணவுகளை உள்ளது போலவே வறுத்த உணவுகளிலும் அதிக அளவு எண்ணெய் உள்ளது.

இந்த மாதிரியான எண்ணெய் உள்ள வறுத்த உணவு பொருட்கள் துரித உணவுகள் மற்றும் தெரு கடை உணவுகளை போலவே உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும். எனவே கோடை காலத்தில் இந்த மாதிரியான வறுத்த உணவு பொருட்கள் உணவுகளை மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விடாதீர்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> குளிர்க்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்களை இப்படி கொடுத்தால் சளி பிடிக்காது

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்