குழந்தைகளுக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் கொடுக்க வேண்டும்
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தாய்மார்கள் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தை பிறந்ததும் 2 வருடத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.ஏனென்றால் தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் வேறு எதிலும் இல்லை. ஆனால் குழந்தைக்கு மூன்று வயது ஆரம்பித்ததும் பல் முளைக்க ஆரம்பிக்கிறது. பல் முளைத்ததும் குழந்தைக்கு பருப்பு சாதம், மற்றும் சத்தான உணவுகளாக பார்த்து பார்த்து கொடுப்போம். ஆனால் குழந்தைக்கு பல் துலக்குவதற்கு எந்த பேஸ்ட்டை கொடுக்கிறீர்கள்.! நீங்கள் எந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பல் துலக்குறீர்களோ அதே பேஸ்ட்டை தானே குழந்தைக்கு கொடுக்கிறீர்கள். இந்த செயல் தான் ரொம்ப தவறானது. அதனால் இந்த பதிவில் குழந்தைக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க
குழந்தைக்கு பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்:
பொதுவாக டூத் பேஸ்ட்டில் Fluoride பயன்படுத்துவார்கள். இவை பல்லில் உள்ள கறைகளை நீக்கி பல்லில் சொத்தை விழுகாமல் பார்த்து கொள்ளும். ஆனால் இதனுடைய அளவு அதிமானால உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயதுபடி குழந்தைக்கு எந்த மாதிரியான டூத் பேஸ்ட் கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
2 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு Fluoride இல்லாத டூத் பேஸ்ட் ஆக தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு டூத் பேஸ்ட்டை துப்பாமல் விழுங்கி விடுவார்கள். அப்படி விழுங்கும் போது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும்.
2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைக்கு Children’s tooth paste தான் கொடுக்க வேண்டும். Children’s tooth paste-ல் Fluoride-ன் அளவு குறைவாக தான் இருக்கும். பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் Fluoride-ன் 1000 ppm வரை இருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.மேலும் 6 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு டூத் பேஸ்ட்டை அரிசி அளவிற்கு தான் வைக்க வேண்டும். அதுவே 6 வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு நிலக்கடலை அளவிற்கு வைத்தால் போதுமானது.
டூத் பேஸ்ட்டை வைத்து பாத்ரூமை வாசனையாக வைக்க முடியுமா.?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |