குழந்தையை எதில் படுக்க வைக்க வேண்டும்..! Which Bed Is Safe For Newborn..!
Which Bed Is Safety For Babies: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தையை எதில் படுக்கவைத்தால் நல்லது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்..! தாய்மார்கள் அனைவரும் தன் வயிற்றில் ஈன்றெடுத்த குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாய் இருப்பார்கள். அந்த வகையில் தங்கள் குழந்தைகளை தூளி, மெத்தை, பாய், தொட்டில் இவற்றில் எது குழந்தைக்கு பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்ற அருமையான பதிவு இதோ உங்களுக்காக..!
தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food for 6 months..! |
குழந்தைக்கு எந்த தொட்டில் நல்லது:
குழந்தை தன் தாயின் கருவறையில் இருந்து வெளியேறிய பிறகு தன் படுக்கை நிலையை மாற்றி பழகிக்கொள்ள மிகவும் சிரமப்படும். குழந்தைக்கு ஆரம்ப காலத்தில் உடல் எலும்புகளானது மிகவும் லேசான எலும்பு தன்மையுடன் இருக்கும்.
தாயின் வயிற்றில் 9 மாதங்கள் வரை குழந்தை சுருண்ட நிலையில் படுத்து பழகி இருக்கும். குழந்தை வெளியேறிய பிறகு அதன் படுக்கையை மாற்றிக்கொள்ள சிரமப்படும். தாய்மார்கள் குழந்தையை தொட்டிலில் படுக்க வைப்பதால் குழந்தைக்கு உடலில் பல வித நோய்கள் வர காரணமாகிறது.
குழந்தைக்கு ஏற்ற தூளி:
குழந்தையின் படுக்கைக்கு சரியானது எதுவென்றால் தூளி தான். ஏனென்றால் குழந்தையானது தாயின் கருவறையில் இருக்கும் போது குழந்தையின் சம நிலையினை இந்த தூளி தான் கொடுக்கும். தொட்டிலானது குழந்தைகளுக்கு சரியான நிலையில் பொருந்தாது என்பதால் தூளியே குழந்தைக்கு ஏற்றது.
தூளியில் குழந்தையை படுக்க வைப்பதால் குழந்தையின் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் உடல் சீராகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் இந்த தூளியானது தடுக்கும்.
குழந்தைக்கு தூளி எப்படி கட்ட வேண்டும்:
குழந்தைக்கு தூளியினை கட்டும்போது பருத்தியால் ஆன சேலைகளையோ, அல்லது பருத்தியால் ஆன வேட்டியினையோ எடுத்து கயிற்றால் முடித்து கொக்கியில் மாட்டி தொட்டில் போன்று அமைத்து குழந்தையை தூங்க வைப்பது நல்லது. சேலை மற்றும் வேட்டியால் ஆன தொட்டிலை தான் நாம் தூளி என்று சொல்கிறோம்.
குழந்தைக்கு தூளியினால் கிடைக்கும் நன்மை:
தூளியானது குழந்தைக்கு படுக்கும் போது தன் தாயுடன் சேர்ந்து உறங்குவது போன்ற மனநிலை குழந்தைக்கு கொடுக்கும். குழந்தையின் முதுகு, எலும்பு பகுதியானது தூளியில் படுத்து உறங்குவதால் எலும்பு வளைவுகள் ஆனது நல்ல சௌகரியம் கொடுக்கும். தாயுடன் சேர்ந்து உறங்குவது போன்று இருப்பதால் குழந்தை நன்கு உறங்கும்.
குழந்தைக்கு வீட்டிலே செய்யலாம்..! ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப்..! how To Make Baby Oatmeal At home..! |
குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகரிக்கும்:
குழந்தையை தூளியில் போட்டு ஆட்டும் போது தூளி முன்னும் பின்னுமாக ஆடும் நிலையில் குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகரிக்க செய்யும். குழந்தை தொட்டிலில் இருக்கும் போது சிறுநீர் கழித்துவிட்டால் தூளியிலிருந்து சிறுநீரானது வடிந்து ஈரத்திலிருந்து குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும். தூளியில் படுக்க வைப்பதால் குழந்தை கீழே விழுவதற்கும் வாய்ப்பில்லை.
தூளி பல பிரச்சனையை தடுக்கும்:
குழந்தை தூளியில் படுத்து உறங்க வைப்பதால் கால் மற்றும் தலை பகுதி மேலே உயர்ந்து இருப்பது போன்று வயிறு மற்றும் முதுகு பகுதி கீழே பள்ளமான இடத்தில் இருப்பதால் உண்ட உணவானது நன்றாக செரிமானம் ஆகி குழந்தை எந்த வித பிரச்சனையும் இன்றி உறங்கும். தாய்மார்கள் குழந்தையை தூளியில் போட்டு ஆட்டுவதால் தாயினையோ அல்லது ஆட்டுபவரையோ தன் நேர் கண்களால் அவர்களை பார்க்க இயலும். இதனால் மாறு கண் பிரச்சனை குழந்தைகளுக்கு வராமல் இந்த தூளி தடுக்கும்.
குழந்தையின் சிறுமூளையை பாதுகாக்கும் தூளி:
தூளியானது முன்னும் பின்னுமாக ஆடுவதால் குழந்தையின் ஈக்குலிபிரியம் என்று சொல்லக்கூடிய சிறுமூளை பகுதியானது தூளி சமநிலை படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்கும். தூளியின் நிழலானது குழந்தையின் மேலே படுவதால் குழந்தைகள் நீண்ட நேரம் வரையிலும் தூங்கும்.
குழந்தை கால், கைகளை மடக்கி படுக்காமல் நீட்டிய நிலையில் உறங்குவதால் மூட்டு, எலும்பு பகுதிகள் ஆரோக்கியத்துடன் செயல்படுகிறது. தூளியில் உறங்க வைப்பதால் குழந்தைக்கு எதிர்காலங்களில் மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனை வராமல் இருக்கும்.
ஆரோக்கியம் தரும் தூளி:
தூளியில் இருக்கும் போது குழந்தையை எறும்புகளோ, பூச்சிகளோ கடிப்பது குறைவு. குழந்தையின் வளர்ச்சிகளை பொறுத்து வேகத்துடன் ஆட்டலாம். குழந்தைக்கு தூளியில் நடுத்தரமான வேகமே சிறந்தது. தூளியில் குழந்தை உறங்கும் போது நல்ல மன அமைதி கிடைக்கும்.
இடம் வசதி, நாகரிக்கத்தால் தூளியின் பழக்கத்தினை என்றும் மாற்றி விடாதீர்கள். குழந்தைக்கு தூளியே மிகவும் ஆரோக்கியத்தினை கொடுக்கக்கூடிய ஒன்றாகும்.
தாய்மார்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் மறக்காமல் பகிர்ந்துக்கொள்ளவும்..!
கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..! Baby weight during pregnancy in tamil..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips |