தக்காளிக்கு பதில் என்னென்ன பொருட்களை சமைக்க பயன்படுத்தலாம் தெரியுமா?

சமையல் டிப்ஸ்..! 

தக்காளியின் விலை மழை காரணமாக நாள்தோறும் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தாற்காலிகமானதுதான் என்றாலும் தொடர் மழையால் மக்கள் அவதிப்படும் இந்த சூழலில் இந்த விலை உயர்வும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் தக்காளியின் விலை ரூ.100-யை கடந்து விட்டது. தக்காளியின் விலை ஏறினாலும் தக்காளியின் தனித்துவமான புளிப்பு சுவையை வேறுசில பொருட்களால் கொடுக்க முடியும். தக்காளி விலை மீண்டும் குறையும்வரை மக்கள் இந்த பொருட்களை சமையலில் பயன்படுத்துவது அவர்களுக்கு நல்லது. அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிச்சன் டிப்ஸ்

மாங்காய் பொடி:

இந்த  மாங்காய் பொடி தக்காளியைப் போலவே இனிப்பும், புளிப்பும் சுவையைக் கொண்டதாக இருக்கும். இதனுடைய விலையும் குறைவானது.  ஆகவே உங்கள் சமையலில் தக்காளிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் மாங்காய் பொடி சேர்த்து சமைக்கலாம்.

புளி:

அடுத்ததாக சொல்லக்கூடிய பொருள் புளி. க்காளிக்குப் பதிலாக நீங்கள் புளியைப் பயன்படுத்தலாம்.  புளி குழம்பை கெட்டியாக்கவும் உதவுகிறது, எனவே தக்காளி விலை குறையும் வரை இதனைப் பயன்படுத்தி வரலாம்.

தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைக்கலாம்? 

நெல்லிக்காய்:

குளிர்காலம் வந்துவிட்டதால், தக்காளிக்குப் பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம், ஆனால் அது சற்று புளிப்பு கூடுதலாகவும் இருக்கிறது, எனவே குழம்பில் சேர்க்கும்போது அளவு குறித்து கவனமாக இருங்கள்.

தயிர்:

தக்காளிக்குப் பதிலாக, நீங்கள் சாதாரண தயிர் சேர்க்கலாம். தயிரின் அமிலச் சுவை மசாலாப் பொருட்களுடன் நன்றாகக் கலந்து உங்களுக்கு  சுவையைத் தருகிறது. சுவை சரியானதாக இருக்க, 2-3 நாட்கள் பழமையான தயிர் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது, இது சரியான புளிப்பு சுவையை வழங்கும். தயிரை பயன்படுத்தி மோர் குழம்பு வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்..

எலுமிச்சை:

எலுமிச்சையும் புளிப்பு சுவையுள்ள ஒரு உணவு பொருள்.. ஆகவே உணவில் தக்காளிக்கு பதிலாக நீங்கள் புளிப்பு சுவையை அதிகரிக்க சிறிதளவு எலுமிச்சையை உபயோகிக்கலாம்..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil